» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாலிபரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 2பேர் கைது
திங்கள் 17, மார்ச் 2025 8:58:26 AM (IST)
கோவில்பட்டியில் முன்விரோதத்தில் வாலிபரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 2பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வேலாயுதபுரம் 2- வது தெருவை சேர்ந்தவர் குருசாமி மகன் அய்யாதுரை (30). சுமை தூக்கும் தொழிலாளியான இவருக்கும், முகமது சாலியாபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மகாராஜாவுக்கும் இடையே கோவில் கொடை விழாவின் போது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வேலாயுதபுரம் சுடுகாடு அருகே உள்ள குளியலறை முன்பு அய்யாதுரை நின்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு நண்பர்கள் 5 பேருடன் வந்த மகாராஜா, திடீரென்று அய்யாதுரையை அரிவாளால் சரமாரியாக வெட்டினாராம். அவருடன் வந்த 5 பேரும் அவரை கம்பால் தாக்கினார்களாம். இதில் பலத்த காயமடைந்த அய்யாதுரை யின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடியுள்ளனர். இதைபார்த்த மகாராஜா உள்ளிட்ட 6பேரும், அய்யாத்துரைக்கு கொலை மிரட்டல் விடுத்தபடியே தப்பி ஓடி விட்டனர்.
இதில் காயமடைந்த அய்யாதுரையை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து மகாராஜா (26), அவரது நண்பர் புது கிராமம் 3-வது தெருவை சேர்ந்த கஜேந்திர பூபதி மகன் காளிமுத்து (22) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 89 பேருக்கு பிடியாணை நிறைவேற்றம் : காவல்துறை நடவடிக்கை!
திங்கள் 17, மார்ச் 2025 10:17:12 PM (IST)

குளத்தில் மூழ்கி வாலிபர் பலி : மனைவி கண் முன்னே பரிதாபம்
திங்கள் 17, மார்ச் 2025 9:39:32 PM (IST)

தூத்துக்குடி - திருச்சி புதிய விமான சேவை 30ம் தேதி தொடக்கம் : கால அட்டவணை வெளியீடு
திங்கள் 17, மார்ச் 2025 9:30:03 PM (IST)

நண்பகலில் தூய்மை பணியாளர்களை பணியில் ஈடுப்படுத்த கூடாது : ஆட்சியர் அறிவுறுத்தல்!
திங்கள் 17, மார்ச் 2025 8:08:17 PM (IST)

தூத்துக்குடி கடலில் சங்கு குளித்த மீனவர் பரிதாப சாவு!
திங்கள் 17, மார்ச் 2025 8:02:02 PM (IST)

டாஸ்மாக் விவகாரம் : தூத்துக்குடியில் தடையை மீறி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் - 81 பேர் கைது!
திங்கள் 17, மார்ச் 2025 7:51:51 PM (IST)
