» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஓடும் பஸ்சில் பிக் பாக்கெட்: 2 பெண்கள் கைது
சனி 15, மார்ச் 2025 8:17:29 PM (IST)
குமரி அருகே ஓடும் பஸ்சில் பணம் திருடிய தூத்துக்குடியைச் சேர்ந்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டம் பாகோடு வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி கீதாதேவி (50). இவர் வட்டவிளையில் இருந்து பொருட்கள் வாங்க மார்த்தாண்டம் பஸ்சில் சென்றபோது அவரது பர்சை அருகாமையில் நின்றிருந்த 2 பெண்கள் திருடி உள்ளனர். இதனை அருகே இருந்த பெண் பார்த்து கூச்சலிட்டுள்ளார். தொடர்ந்து சக பயணிகள் பர்சை திருடிய 2 பெண்களை பிடித்து மார்த்தாண்டம் போலீசில் ஒப்படைத்தனர்.
அவர்கள் தூத்துகுடி அண்ணாநகர் ஓடை தெருவை சேர்ந்த அஞ்சலி (29), பவானி (27) என்பது தெரியவந்தது. மேலும் பர்சை திருடியதையும் ஒப்புகொண்டனர். அந்த பர்சில் ரூ.2 ஆயிரம் இருந்து உள்ளது. இதுபோன்று கூட்ட நெரிசல் மிக்க பஸ்சில் திருடுவது வேலையாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். அவர்களை கைது செய்து போலீசார் தக்கலை பெண்கள் சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
ஞாயிறு 16, மார்ச் 2025 8:37:35 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் நீக்கம்: என்.ஆர். தனபாலன் அறிவிப்பு
ஞாயிறு 16, மார்ச் 2025 8:35:08 PM (IST)

தூத்துக்குடியில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:20:02 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் பக்தர் திடீர் மரணம்!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:13:04 PM (IST)

சாலையில் பள்ளத்தை சரிசெய்த போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:08:41 PM (IST)

மது போதையில் டார்ச்சர்: கணவனை கட்டையால் தாக்கிய மனைவி கைது!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:04:44 PM (IST)
