» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சர்வதேச திரைப்பட விழாவில் முதலிடத்தை வென்ற திரு குறும்பட குழுவினருக்கு மேயர் வாழ்த்து
சனி 15, மார்ச் 2025 7:50:21 PM (IST)

சர்வதேச திரைப்பட விழாவில் முதலிடத்தை வென்ற திரு குறும்பட குழுவினருக்கு மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்து தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையும், வானம் என்டர்டைன்மென்ட்டும் தூத்துக்குடியை சேர்ந்த இயக்குனர் அருந்ததி அரசு இணைந்து திருநங்கைகளின் வாழ்க்கை நகர்வைக் குறித்து எடுக்கப்பட்ட விழிப்புணர்வு குறும்படமான "திரு" என்கிற குறும்படம் கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் முதலிடத்தை வென்றதை தொடர்ந்து படக்குழுவினர் மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தூத்துக்குடி முன்னாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் காவல்துறை அதிகாரியாகவே நடித்து சிறப்பித்திருந்தார். இந்த நிகழ்வில் இயக்குனர் அருந்ததி அரசு, இணை தயாரிப்பாளர்கள் ஜாகீர் ஹுசைன், மாரிமுத்து, நிர்வாக மேற்பார்வையாளர் மைக்கேல் ஜெரோம், படத்தில் நடித்த திருநங்கைகள் ஆர்த்தி, சிந்துஜா, ஜமுனா, கவிஞர் மாரிமுத்து, சக்திவேல், உதவி இயக்குனர்கள் திருஉதயகுமார், முத்துராம் சரண், ஸ்டில்ஸ் முனீஸ், காட்வின் ஆகியோர் உடன் இருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
ஞாயிறு 16, மார்ச் 2025 8:37:35 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் நீக்கம்: என்.ஆர். தனபாலன் அறிவிப்பு
ஞாயிறு 16, மார்ச் 2025 8:35:08 PM (IST)

தூத்துக்குடியில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:20:02 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் பக்தர் திடீர் மரணம்!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:13:04 PM (IST)

சாலையில் பள்ளத்தை சரிசெய்த போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:08:41 PM (IST)

மது போதையில் டார்ச்சர்: கணவனை கட்டையால் தாக்கிய மனைவி கைது!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:04:44 PM (IST)
