» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி ஸ்பிக் - கிரீன்ஸ்டார் நிறுவனத்தில் தேசிய தொழிலாளர் பாதுகாப்பு வார விழா
சனி 15, மார்ச் 2025 10:13:39 AM (IST)

தூத்துக்குடி ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டார் உர தொழிற்சாலையில் 54வது தேசிய தொழிலாளர் பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.
தூத்துக்குடி ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டார் உர தொழிற்சாலையில் 54வது தேசிய தொழிலாளர் பாதுகாப்பு வார விழாவினை வஉசி துறைமுகத்தின் ஹார்பர் மாஸ்டர் கேப்டன் கிங்ஸ்டன் நீல் துரை, தேசிய தொழிலாளர் பாதுகாப்பு வார கொடியேற்றி துவக்கிவைத்தார். மேலும் அவர் பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு பொருட்காட்சியையும் அவர் துவக்கிவைத்தார். அவரது தலைமையில் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், தொழிலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிறைவு விழாவிற்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், இணை இயக்குனர், தமிழ்செல்வன் தலைமை வகித்தார். ஸ்பிக் நிறுவனத்தின் முழுநேர இயக்குனர் பாலு, க்ரீன்ஸ்டர் நிறுவனத்தின் முழுநேர இயக்குனர் செந்தில் நாயகம், ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டார் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், தொழிலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். தேசிய தொழிலாளர் பாதுகாப்பு வார விழாவினையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 89 பேருக்கு பிடியாணை நிறைவேற்றம் : காவல்துறை நடவடிக்கை!
திங்கள் 17, மார்ச் 2025 10:17:12 PM (IST)

குளத்தில் மூழ்கி வாலிபர் பலி : மனைவி கண் முன்னே பரிதாபம்
திங்கள் 17, மார்ச் 2025 9:39:32 PM (IST)

தூத்துக்குடி - திருச்சி புதிய விமான சேவை 30ம் தேதி தொடக்கம் : கால அட்டவணை வெளியீடு
திங்கள் 17, மார்ச் 2025 9:30:03 PM (IST)

நண்பகலில் தூய்மை பணியாளர்களை பணியில் ஈடுப்படுத்த கூடாது : ஆட்சியர் அறிவுறுத்தல்!
திங்கள் 17, மார்ச் 2025 8:08:17 PM (IST)

தூத்துக்குடி கடலில் சங்கு குளித்த மீனவர் பரிதாப சாவு!
திங்கள் 17, மார்ச் 2025 8:02:02 PM (IST)

டாஸ்மாக் விவகாரம் : தூத்துக்குடியில் தடையை மீறி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் - 81 பேர் கைது!
திங்கள் 17, மார்ச் 2025 7:51:51 PM (IST)
