» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விண்வெளி தொழில் பூங்காவுக்கு நிலம் கையகப்படுத்த தடை: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
சனி 15, மார்ச் 2025 8:45:40 AM (IST)
விண்வெளி தொழில் பூங்காவுக்கு நிலம் கையகப்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள கொட்டாங்காடு பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் "எங்கள் பகுதியில் உள்ள ஆதியாக்குறிச்சியில் தமிழக அரசு சார்பில் விண்வெளி தொழில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன. நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. ஆதியாக்குறிச்சி பகுதியில் ஏற்கனவே பல்வேறு திட்டங்களுக்காக 4 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்தநிலையில் விண்வெளி தொழில் பூங்காவுக்கும் இதே பகுதியில் நிலங்களை கையகப்படுத்தினால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். இதுகுறித்து பொதுமக்களிடம் நடத்திய கருத்து கேட்பு கூட்டத்தில் முறையான விளக்கம் அளிக்கவில்லை. எனவே மக்களுக்கு மறுகுடியமர்வு உள்ளிட்ட மறுவாழ்வு வசதிகளை ஏற்படுத்தி தராமல் விண்வெளி தொழில் பூங்காவுக்கு நிலம் கையகப்படுத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரர் தெரிவிக்கும் பகுதியில் நிலங்கள் கையகப்படுத்தும் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக தமிழக தொழில் துறை செயலாளர், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 20-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1கோடி பீடி இலைகள் பறிமுதல்!
திங்கள் 17, மார்ச் 2025 8:39:32 AM (IST)

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
ஞாயிறு 16, மார்ச் 2025 8:37:35 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் நீக்கம்: என்.ஆர். தனபாலன் அறிவிப்பு
ஞாயிறு 16, மார்ச் 2025 8:35:08 PM (IST)

தூத்துக்குடியில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:20:02 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் பக்தர் திடீர் மரணம்!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:13:04 PM (IST)

சாலையில் பள்ளத்தை சரிசெய்த போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:08:41 PM (IST)
