» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி கடல் பகுதியில் புதிய விலாங்கு மீன் இனம் கண்டுபிடிப்பு!

சனி 15, மார்ச் 2025 8:29:49 AM (IST)



தூத்துக்குடி கடல் பகுதியில் புதிய விலாங்கு மீன் இனம் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு ‘தமிழிகம்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வேளாண் ஆராய்ச்சி குழும இயக்குனர் (பொறுப்பு) அஜித்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "அறிவியல் ரீதியாக ‘ஆங்குலிபார்ம்ஸ்’ என்று அழைக்கப்படும் விலாங்கு மீன்கள் 16 குடும்பங்களின் கீழ் 156 இனங்களில் 1,040 வகையை கொண்டு உள்ளது. இந்திய கடற்கரையில் 11 குடும்பங்களின் கீழ் 53 இனங்களைச் சேர்ந்த 146 வகையான விலாங்கு மீன்கள் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன. 

இதில் தமிழ்நாட்டில் இருந்து 42 வகையான விலாங்கு மீன்கள் மட்டுமே ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில் இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் கீழ் இயங்கும் தேசிய மீன் மரபணு வள பணியகம், விலாங்கு மீன்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி கடற்கரையில் ஒரு புதிய வகை விலாங்கு மீன் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த மீன் பிற விலாங்கு மீன் இனங்களில் இருந்து வேறுபட்டு உள்ளதா? என்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதற்காக விரிவான உருவவியல் பகுப்பாய்வு, எலும்புக்கூடு ரேடியோகிராபி மற்றும் மேம்பட்ட மூலக்கூறு குறிப்பான்கள் குறித்து ஆய்வு செய்தனர். இதில் தூத்துக்குடியில் கண்டறியப்பட்ட விலாங்கு மீன் மற்ற விலாங்கு மீன் இனங்களில் இருந்து வேறுபட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த மீனின் முன்புற கண் விளிம்பில் ஒற்றை வெள்ளை பட்டையுடன் தலையின் பின்புற மேற்பரப்பு உள்ளது. சிறிய கரும்புள்ளிகள் கீழ்தாடையில் உள்ளது. நீண்ட பற்கள் திட்டு, மேல்தாடையின் பாதி நீளத்தை அடைகிறது. 120 முதல் 129 முதுகெலும்புகளை கொண்டுள்ளது.

இதையடுத்து புதிய விலாங்கு மீன் இனத்தின் அடையாளம் வகைப்பிரித்தல் துறையில் உள்ள சர்வதேச நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்பட்ட சர்வதேச இதழில் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து தூத்துக்குடியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை விலாங்கு மீனுக்கு, தமிழுடன் தொடர்புடையதாக ‘தமிழிகம்’ என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital

New Shape Tailors







Thoothukudi Business Directory