» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசுக்கும் மதத்திற்கும் இடைவெளி இருக்க வேண்டும் : பொருநை புத்தகத் திருவிழாவில் கனிமொழி எம்பி பேச்சு!
ஞாயிறு 9, பிப்ரவரி 2025 6:02:33 PM (IST)

மதம் அரசின் கைக்குசென்றால் அது அதிகாரம் மிக்கதாக ஆகிவிடும். அரசுக்கும் மதத்திற்கும் இடைவெளி இருக்கவேண்டும் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசினார்.
திருநெல்வேலியில் 8வது பொருநை புத்தகத் திருவிழாவில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பண்பாட்டு ஆய்வாளர் பேரா.தொ.பரமசிவன் 75 நினைவரங்கத்தினை தொடங்கி வைத்து "பண்பாட்டு அசைவுகள்” என்ற தலைப்பில் பேசுகையில் மதம் என்பது அரசு நிறுவனமாக மாறிவிடக் கூடாது மக்களுக்கானதாக இருக்க வேண்டும், மதம் அரசின் கைக்குசென்றால் அது அதிகாரம் மிக்கதாக ஆகிவிடும் அரசுக்கும் மதத்திற்கும் இடைவெளி இருக்கவேண்டும் என தெரிவித்தார்.
திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மையத்தில் 8வது பொருநை புத்தகத் திருவிழா 31.01.2025 அன்று தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று 9வது நாள் நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு பண்பாட்டு ஆய்வாளர் பேரா.தொ.பரமசிவன் 75 நினைவரங்கத்தினை தொடங்கி வைத்து பண்பாட்டு அசைவுகள்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து பண்பாட்டு ஆய்வாளர் பேரா.தொ.பரமசிவன் அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார்கள்.
மேலும், திருநெல்வேலி மாவட்ட பள்ளி, மாணவ, மாணவியர்களுக்கு தனது சொந்த நிதியில் பல்வேறு தலைப்பில் கொண்ட 1000 நூல்களை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமாரிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி பேசியதாவது: தமிழர்களின் வரலாறு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிறந்து விளங்கியது என்பதை வரலாற்று ஆராய்ச்சிகள் தெளிவாக கூறுகின்றன. தமிழின் பெருமையை வாழ்நாள் முழுவதும், தமிழர்களின் வரலாற்றை வாழ்நாள் முழுவதும், ஆய்வு செய்து கொண்டு எழுதியவர், சாமானிய மக்கள், சாதாரன மக்கள் இவர்கள் தான் இந்த நாட்டுடைய வரலாறு என்று உலகத்திற்கு பறைசாற்றியவர் பேரா.தொ.பரமசிவன்.
தொ.ப அவர்களின் ஆய்வு சாதாரன மக்களின் வாழ்வியல் முறையை பற்றி தான் தொடர்ந்து இருந்தது. சிறு தெய்வ வழிபாடுகள் முக்கியத்துவம் குறித்தும் மக்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார். பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும், ஒதுக்கப்பட்ட மக்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தவர். பெரியார் அவர்களை தாண்டவும் முடியாது வெல்லவும் முடியாது என்று அசைக்க முடியாத நம்பிக்கையுடன் தொ.ப செயல்பட்டார். இப்படி திராவிட சிந்தனையோடு, பகுத்தறிவோடு வாழ்க்கையை வாழ்ந்தவர்தான் தொ.ப . தொ.ப. அவர்களின் புத்தகத்தில் ஜாதி மதங்களை கடந்து அடித்தட்ட மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் என்னற்ற தகவல்களை தனது நூல்களில் எழுதி உள்ளார்கள்.
இன்று சமூகத்தில் பண்பாட்டு ஆய்வாளர் தொ.ப. நூல்கள் பெரிய அளவில் இடம் பிடித்துள்ளது. தொ.ப. அவர்களின் புத்தகங்களை நாம் முழுமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும். மதம் என்பது அரசு நிறுவனமாக மாறிவிடக் கூடாது மக்களுக்கானதாக இருக்க வேண்டும், மதம் அரசின் கைக்குசென்றால் அது அதிகாரம் மிக்கதாக ஆகிவிடும் அரசுக்கும் மதத்திற்கும் இடைவெளி இருக்கவேண்டும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப், மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, கிறித்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத் தலைவர் விஜிலா சத்தியானந்த், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ரேவதி மற்றும் எழுத்தாளர்கள், அரசு அலுவலர்கள், மாணவ,மாணவியர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
புதன் 26, மார்ச் 2025 10:24:20 AM (IST)

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம் : விளாத்திகுளத்தில் பரபரப்பு
புதன் 26, மார்ச் 2025 10:15:39 AM (IST)

பாரதியார் பிறந்த இல்லம் பழமை மாறாமல் மறு சீரமைக்கப்படும் : ஆட்சியர் க.இளம்பகவத்
புதன் 26, மார்ச் 2025 8:14:52 AM (IST)

பெரியதாழை, புத்தன்தருவை பகுதிகளில் எஸ்பி ஆய்வு
புதன் 26, மார்ச் 2025 8:10:28 AM (IST)

இளம்பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 26, மார்ச் 2025 7:56:22 AM (IST)

ரோட்டரி கிளப் ஆப் பியர்ல் சிட்டி சார்பில் இப்தார் நிகழ்ச்சி
புதன் 26, மார்ச் 2025 7:49:05 AM (IST)
