» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20லட்சம் மதிப்புள்ள ரோல் வெடிகள் பறிமுதல் : தூத்துக்குடியில் பரபரப்பு

வெள்ளி 7, பிப்ரவரி 2025 7:57:48 PM (IST)



தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்புள்ள ரோல் வெடிகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரை பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக வெடி பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர் இருதயராஜ், குமார், இசக்கி முத்து, முதல் நிலை காவலர் பழனி, பாலமுருகன், ஆகியோர் கடற்கரை பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 மூட்டைகளை பிரித்து சோதனை செய்தபோது அதில், குழந்தைகள் பொம்மை துப்பாக்கிளில் வைத்து வெடிக்கும் ரோல் வெடிகள் இருப்பதும், இதனை மர்ம நபர்கள் இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து வெடிகளை போலீசார் கைப்பற்றி சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர். கைப்பற்றப்பட்ட வெடிகளின்  சர்வதேச மதிப்பு சுமார் ரூ.20 இலட்சம் ஆகும். இது தொடர்பாக தப்பியோடிய கடத்தல் கும்பலை கியூ பிரிவு  போலீசார் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors



CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory