» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் குடியரசு தினவிழா கோலாகலம் : ஆட்சியர் க. இளம்பகவத் தேசியக் கொடி ஏற்றினார்
ஞாயிறு 26, ஜனவரி 2025 11:39:30 AM (IST)

தூத்துக்குடியில் 76வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 76வது குடியரசு தின விழா தருவை மைதானம் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் கக. இளம்பகவத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அமைதியையும், சமாதானத்தையும் வலியுறுத்தும் விதமாக வென்புறாக்கள் பறக்கவிடப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், காவல் துறை மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த 681 அரசு அலுவலர்களுக்கு சிறப்பாக பணிபுரிந்தமைக்கு நற்சான்றிதழ்கள் வழங்கினார். முன்னதாக சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை உயர் அதிகாரிகள் 54 பேருக்கு பதக்கங்களும், 73 காவலர்களுக்கு சான்றிதழையும் வழங்கினார். மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் 67 பயனளிகளுக்கு 4 கோடியே 62 லட்சத்து 66 ஆயிரத்து 556 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் பள்ளி மாணவ மாணவிகள் 2500 பேர் கலந்து கொண்ட கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், சமூக நல அலுவலர் பிரேமலதா, மாற்றுத் திறனாளிகள் அலுவலர் பிரம்ம நாயகம், கோட்டாட்சியர்கள் பிரபு, கலைமாமணி, மகாலட்சுமி, ஆதிதிராவிடர் நல அலுவலர் செபஸ்தியான், மாவட்ட வளங்கள் அலுவலர் மல்லிகா, வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், தாசில்தார் முரளிதரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் முத்துக்குமார், காவல்துறை நகர உதவி கண்காணிப்பாளர் மதன் போலீஸ் மக்கள் தொடர்பு அலுவலர் செல்லப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:34:19 PM (IST)

போக்சோ வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:03:25 PM (IST)
_1739287857.jpg)
காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் தகவல்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:59:57 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் தெப்பத்திருவிழா : திரளான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:40:46 PM (IST)

புளியம்பட்டி அந்தோணியார் ஆலயத் திருவிழா: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:40:44 PM (IST)
