» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மழை வெள்ளத்தில் மூழ்கிய 5000 ஏக்கர் பயிர்கள் : விவசாயிகள் வேதனை

ஞாயிறு 15, டிசம்பர் 2024 2:33:24 PM (IST)



விளாத்திகுளம் அருகே மழை வெள்ளத்தில் 5000 ஏக்கர் பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கனமழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள P. ஜெகவீரபுரம், கந்தசாமிபுரம், புதுசின்னையாபுரம், மாதலாபுரம், பூதலாபுரம், சேர்வைக்காரன்பட்டி, சங்கரப்பநாயக்கன்பட்டி, கட்டை தலைவன் பட்டி, சென்னம்பட்டி, துரைச்சாமிபுரம், குமாரலிங்கபுரம், மாவிலோடை, சின்னூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்தாண்டு மானாவரி நிலத்தில் சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மிளகாய், வெங்காயம், உளுந்து, பாசி, கம்பு மக்காசோளம் உள்ளிட்ட பயிர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

மேலும், விளைநிலங்கள் முழுவதிலும் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இப்பகுதிகளில் உள்ள நீர்வரத்து ஓடைகளை முறையாக தூர்வாராதது மற்றும் பராமரிப்பு செய்யாததன் காரணத்தினால் தான் மழை வெள்ளநீர் விளைநிலங்களுக்குள் புகுந்ததாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, இப்பகுதியில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், நீர்வரத்து ஓடைகளை முறையாக தூர்வார வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory