» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் தொடர் மழை: சாலைகளில் வெள்ளம்!
வியாழன் 12, டிசம்பர் 2024 12:29:35 PM (IST)
தூத்துக்குடியில் நேற்று இரவு தொடங்கி பெய்து வரும் தொடர் மழையால் சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பழைய மாநகராட்சி அலுவலகம் உட்பட நகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பல சாலைகள், தெருக்களில் மழைநீர் குளம் போல தேங்கி நின்றது.
இதனைத் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மழைநீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோன்று மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 76.50 மிமீ மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக வைப்பாரில் 25.00 மி.மீ., மழை பதிவானது. தூத்துக்குடியில் 6.8, ஸ்ரீவைகுண்டம் 3.30, கோவில்பட்டி 3, எட்டயபுரம் 12.20, விளாத்திகுளம் 12, காடல்குடி 6, சூரங்குடி 8மமீ மழை பெய்துள்ளது.
மக்கள் கருத்து
முட்டாள்Dec 13, 2024 - 11:35:52 AM | Posted IP 162.1*****
இனி கொஞ்ச நாள்ல பாதாள சாக்கடையை கழுத்தளவு வரை உயரமா கட்டுவாங்க, அதன் பிறகு செப்டிக் டேங்க் , கழிவறை , கால்வாய் , பாதாள சாக்கடை அனைத்தையும் ஒன்னாகி விடுவாங்க அவளவுதான் திராவிட அறிவு
முட்டாள்Dec 13, 2024 - 11:31:36 AM | Posted IP 172.7*****
இது தான் திராவிட மாடல் டெக்னாலஜி
DurgadeviDec 12, 2024 - 10:22:04 PM | Posted IP 172.7*****
2023 வெள்ளம் வந்ததை மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை செய்யபடாமல் விட்டதால் பல உயிர்பலிகளும், ஒவ்வொரு வீட்டிலும் லட்சகணக்கான பொருட்கள் நாசமானதும்தான் மிச்சம். இதை தவிர்க்க அந்தந்த பகுதிகளிலுள்ள தன்னார்வலர்கள் மூலமாகவோ, அல்லது கோவில்கள்,சர்ச்களில், மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிமூலம் வெள்ள எச்சரிக்கை செய்தால் மக்கள் சுதாரித்து தாழ்வான பகுதிகளிலிருந்து வெளியேறி தங்கள் உயிரையும் உடமைகளையும் காப்பாற்றி கொள்வார்கள் 2023 வெள்ளம் ஊருக்குள் வரகாரணமே பக்கிள் ஓடையின் 200அடி அகலத்தை குறைத்து அல்லது ஆக்கரமித்து இருபுறமும் சாலைஅமைத்தது, இருபுறமும் பேவர்பிளாக் கல் பதித்ததும், ஓடைகறையோரம் நகராட்சி பால்வாடி, அங்கன்வாடி, குளியல் கழிப்பறை, போன்றவைகளே காரணமாகும். இதனால் பக்கிள் ஓடையில் போகவேண்டிய வெள்ள நீர் போக போதிய அகலம் இல்லாததால் ஒவ்வொரு தெருக்கள் வீடுகள் வழகயாக சென்றது இதனால் பல உயிர்பலி பொருள் கார்,பைக்,பிரிட்ஜ்,வாஷிங்மெஷின்,தண்ணீர் மோட்டார்,பீரோ,கட்டில், மெத்தைகள்,கிரைண்டர்,மிக்ஸி, தொழிற்சாலை உபகரணங்கள்,பாடபுத்தகங்கள், மளிகை சாமான்கள் ,துணிமணிகள் என அனைத்தும் பாழாகிறது மிச்சம் 6000 ரூபாய்க்கு இதெல்லாம் வாங்கமுடியுமா, மாநகராட்சி அதிகாரகள்- ரோடு, பேவர்பிளாக்,அங்கன் வாடி டெண்டர்போட்டு ஓடைகரைதான் கிடைச்சதா வெள்ளக்காரன் போட்ட பக்கிள் ஓடையைபாழ்படுத்தி அதை வடிகாலாக்கிவிட்டனர் இதில தூடி சுமார்ட்சிட்டிவேற கேவலம் கலெக்டர் சம்பந்தபட்ட அதிகாரிகள்மீது உரிய நடவடிக்கை எடுத்து பக்கிள்ஓடை இருபுற ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சாலைகள் அவசியம் என்றால் பறக்கும் சாலை சென்னையில் உள்ளதுபோல் அமைத்துகொள்ளுங்கள்.
MartinDec 12, 2024 - 10:08:56 PM | Posted IP 162.1*****
Flood 2.0 work in progress
ஆட்டோகாரன்Dec 12, 2024 - 08:24:23 PM | Posted IP 172.7*****
பள்ளத்தில் தேங்கும் தண்ணீர் வெளியேற பள்ளத்தின் அளவிற்கு கீழே மழைநீர் வடிகால் அமைக்கனும்...பள்ளத்தை விட இவர்கள் கட்டிய மழைநீர் வடிகால் உயரம்..பின்னர் தண்ணீர் எப்படி வெளியேறும்?
M GanesanDec 12, 2024 - 07:29:29 PM | Posted IP 162.1*****
Welcome the belated rain for Thoothukudi.
M Ganesan, TutyDec 12, 2024 - 07:28:10 PM | Posted IP 162.1*****
We Tuticorians welcome this rain so that the ground water table may increase which will be helpful for the standing crops.
M Ganesan,Tuty
AariyaDec 12, 2024 - 07:24:34 PM | Posted IP 162.1*****
தூத்துக்குடி பி என் டி காலனி முழுவதுமே தண்ணீரால சூழப்பட்டுள்ளது.இதற்கு சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கல
அ சண்முகராஜ்Dec 14, 2024 - 08:43:50 AM | Posted IP 162.1*****