» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பு பயிற்சி
திங்கள் 21, அக்டோபர் 2024 7:42:54 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் "நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பு” குறித்த ஒரு நாள் பயிற்சி இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் மூலமாக "நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பு” என்னும் தலைப்பில் இன்று (திங்கட்கிழமை) ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் ப. அகிலன் பயிற்சியை தொடங்கி வைத்தார்.
பல்வேறு முக்கியமான பாடங்களான நன்னீர் அலங்கார மீன் இனங்கள், முட்டை மற்றும் குட்டி ஈனும் அலங்கார மீன் இனங்களின் இனப்பெருக்கம், நீர்த்தரக்கட்டுப்பாடு, செயற்கை உணவு தயாரித்தல், நோய் மேலாண்மை மற்றும் பொருளாதாரம் குறித்த தொழில் நுட்பங்கள் கற்பிக்கப்பட்டது. இப்பயிற்சியில் 14 நபர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியில் துறையின் உதவிப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் (பொறுப்பு) கோ. அருள் ஓளி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். உதவிப்பேராசிரியர்கள் (ஓ) பூ. மணிகண்டன் மற்றும் ம. கீதா ஆகியோர் பயிற்சியை நடத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










