» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்: ஆட்சியருக்கு த.மா.கா., கோரிக்கை!
திங்கள் 14, அக்டோபர் 2024 9:58:35 PM (IST)
கனமழை எதிரொலியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (அக்.15) விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தூத்துக்குடி (வடக்கு) மாவட்ட தலைவர் கே. பி .ராஜகோபால் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி தொடர்ந்து அது அந்தப் பகுதியில் நிலவி வருகிறது.
இதனைத் தொடர்ந்து, வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து புதுவை, வடதமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரை அருகில் நிலை கொள்ளும். இதன் காரணமாக, அடுத்து வரும் 5 தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை தொடரும், என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று மாலை கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த பற்றும் பரவலாக மழை பெய்துள்ளது. மாலை 4 மணிக்கு மேல் பெய்த மழை காரணமாக பள்ளி முடித்து வீட்டுக்கு சென்ற மாணவ மாணவிகள் மழையில் நனைந்தபடி மிகவும் சிரமத்துடன் சென்றனர். ஏற்கனவே 17ஆம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இதில் நாளை 15ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளதால், பள்ளி மாணவ மாணவிகளின் பாதுகாப்பு கருதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










