» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிறப்பு சான்றிதழ் பெறாதவர்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு: வருவாய் அலுவலர் தகவல்!

புதன் 25, செப்டம்பர் 2024 8:19:39 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தை பிறந்து 15 ஆண்டுகளாக பிறப்பு சான்றிதழ் பெறாதவர்கள், வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குழந்தையின் பெயர் பதிவு செய்யப்பட்ட பிறப்புச்சான்றிதழ் மட்டுமே முழுமையான பிறப்புச் சான்றிதழ் ஆகும். இது, பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் உரிமம் பெற மற்றும் வயது குறித்த முடிவான ஆதாரமாக விளங்குகிறது.

குழந்தை பிறப்பை 21 நாள்களுக்குள் பதிவு செய்து இலவச சான்றிதழ் பெறலாம். அதன்பின் பதினைந்து வருடங்களுக்குள் ரூ.200 தாமதக் கட்டணம் செலுத்தி குழந்தையின் பெயரைப் பதிவு செய்யலாம். இந்நிலையில், குழந்தை பிறந்து 15 வருடங்கள் நிறைவடைந்த பின்னும் பெயர் பதிவு செய்யப்படாத நிகழ்வுகளுக்காக, தமிழ்நாடு பிறப்பு, இறப்பு விதிகள் 2000இல் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே, கடந்த 2020 வரை பிறப்பு சான்றிதழ் பெறாதவர்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2000ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும், அதன் பின்னர் 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும், பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழ் பெற வரும் டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாளாகும். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

இன்பென்ட்Dec 10, 2024 - 11:00:34 AM | Posted IP 162.1*****

ஐயா நான் 2004 ஏப்ரல் மாதம் 24 தேதி பிறந்தேன்.எனது தந்தை தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மிக்கேல் அந்தேரணி என்று பெயர் பதிவு செய்து உள்ளார்.ஆனால் என் தாய் எனக்கு இன்பென்ட் என்று பெயர் வைத்தார். என்னுடைய மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், உட்பட எல்லா ஆவனங்களிலும் இன்பென்ட் என்று பெயர் உள்ளது. ஆனால் பிறப்பு சான்றிதழில் மிக்கேல் அந்தேரணி என்று பெயர் உள்ளது.

த. பாண்டியன், கண்காணிப்பாளர், அரசினர் குழந்தைகள் இல்லம், தட்டப்பாறைSep 28, 2024 - 08:00:36 AM | Posted IP 172.7*****

மதிப்பிற்குரிய ஐயா, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழியங்கும் இவ்வில்ல குழந்தைகளுக்கு ஆதார் தவிர வேறு ஆவணங்கள் மற்றும் பிறப்பு குறித்த பதிவு எதுவும் இல்லை. அவர்களுக்கு பிறப்புச் சான்று வழங்க ஆவன செய்யவும்

செந்தமிழ்Sep 27, 2024 - 11:20:12 AM | Posted IP 162.1*****

எனது பிறப்பு பதிவு செய்யவில்லை நான் சாப்பாட்டுல கிராமத்தில் 2008 ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி பிறந்தேன் பிறப்பு சான்றிதழ் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

PriyaSep 26, 2024 - 08:22:12 PM | Posted IP 172.7*****

எனது பிறப்பு பதிவு செய்யவில்லை. நான் 1998ல் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் பிறந்தேன். இப்போது நான் எப்படி பதிவு செய்ய வேண்டும்? தயவு செய்து😫🙏🙏உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

செந்தமிழ்Sep 26, 2024 - 06:28:29 PM | Posted IP 162.1*****

வாங்கறதுக்கு டைம் இல்ல

செந்தமிழ்Sep 26, 2024 - 06:26:51 PM | Posted IP 162.1*****

அவங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லை

HELAN SAVARINA.S ,ஹெலன் செரினா.சSep 26, 2024 - 10:49:04 AM | Posted IP 172.7*****

05/06/2001 Father: SAVARIMUTHU.A MOTHER :SAVARIYAMMAL.S SUGAPRASAVAM AT HOME 3/288 MAIN ROAD PULIVALAM MUSICRI D K TRICHY.DT:pin:621006.

R.V.JanaviSep 26, 2024 - 06:39:49 AM | Posted IP 162.1*****

Thanks for extending the date

SAKKIAHSep 25, 2024 - 11:51:37 PM | Posted IP 172.7*****

If the child born on 20-04-2008 in PHC, what documents will be required to register the birth

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory