» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி - சென்னை இடையே பகல் நேர தினசரி ரயில் : பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை
செவ்வாய் 24, செப்டம்பர் 2024 12:46:33 PM (IST)


தூத்துக்குடி - சென்னை இடையே பகல் நேர "ஜன சதாப்தி" ரயிலை தினசரி இயக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் செயலாளர் மா. பிரமநாயகம் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தென் மாவட்ட மக்களின் வெகு நாள் கோரிக்கையான திருநெல்வேலி ரயில்வே கோட்டம் விரைவில் சில ஆண்டுகளில் உருவாகும் என்ற தங்களின் அறிவிப்பு எங்களுக்கு மகிழ்ச்சியைத் ஏற்படுத்துகிறது. இதற்காக எங்கள் பயணிகள் நலச் சங்கத்தின் சார்பாக தங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தூத்துக்குடியில் இருந்து கொரோனா காலத்திற்கு முன்பாக தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு பகல் நேர லிங்க் எக்ஸ்பிரஸ் வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இணைக்கப்பட்டது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக அந்த ரயில் இயக்கப்படாமல் உள்ளது. இப்போது தூத்துக்குடியில் இருந்து காலையில் மதுரை, திருச்சி, சென்னைக்கு நேரடி ரயில் இயங்கவில்லை. இது குறித்து தங்கள் ரயில்வே துறைக்கு பலமுறை கோரிக்கை வைத்து வருகிறோம்.
தற்போது வண்டி எண். 12081/12082 திருவனந்தபுரம்- கண்ணூர், கண்ணூர்- திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ஜன சதாப்தி ரயில் இப்போது இயக்கப்பட்டு வருகிறது. இதில் 3 ஏசி சேர் கார் பெட்டிகள், 16 சாதாரண உட்காரும் பெட்டிகள், இரண்டு பொதுப் பெட்டிகள் உள்ளது. இந்த ரயில் வருகின்ற செப்டம்பர் 29 முதல் எல்.எச்.பி. கோச்சுகளாக மாறுகிறது. இந்த ஜனசதாப்தி கோச்சுகளை வைத்து தூத்துக்குடியின் நீண்ட நாள் கோரிக்கையான தூத்துக்குடி-சென்னை ஜன சதாப்தி ரயில் இயக்க தங்கள் நிர்வாகத்தை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
இதில் சாதாரண கட்டணத்துடன் பகல் நேரத்தில் சென்னைக்கு பயணிக்க தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு மிகுந்த உபயோகமாக இருக்கும். தூத்துக்குடி - சென்னை முத்துநகர் அதி விரைவு ரயில் எப்போதும் அதிகமான காத்திருப்போர் பட்டியல் காணப்பட்டு கொண்டே இருக்கிறது. நாங்கள் தூத்துக்குடி- சென்னை இடையே பல முறை சிறப்பு ரயில்கள் கேட்டு வருகிறோம் ஆனால் இதுவரை இயக்கப்படவில்லை. ஆதலால், தூத்துக்குடி மாவட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு இந்த தூத்துக்குடி-சென்னை இடையே பகல் நேர ஜனசதாப்தி ரயிலை இயக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் வண்டி எண். 16791-16792 தூத்துக்குடி -பாலக்காடு- தூத்துக்குடி பாலருவி விரைவு ரயிலில் ஒரு மூன்றடுக்கு ஏசி III A/C-1) பெட்டியும், ஒரு இரண்டு அடுக்கு ஏசி பெட்டியும் (II A/C-1), ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி (II SL-1) பெட்டியும் விரைவாக இணைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். வண்டி எண். 16765-16766 தூத்துக்குடி- மேட்டுப்பாளையம்- தூத்துக்குடி வாரம் இரு முறை ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்றும் தங்கள் நிர்வாகத்துக்கு அன்புடன் கோரிக்கை விடுக்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
ரமணன்Sep 26, 2024 - 12:16:19 PM | Posted IP 162.1*****
ஆம் கண்டிப்பாக ரயில்வே துறை நிறைவேற்ற வேண்டும்.. இதில் என்ன ஒரு கொடுமை என்னவென்றால் கேரளாவில் இயங்கிய ஜனசதாப்தி வண்டிக்கு பதிலாக வேற வண்டிய இயக்குவதால் இந்த வண்டியாவது குடுங்க என்று நாம் தள்ளபடுகிறோம்.இதையாவது ரயில்வே துறைக்கும் மற்றும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் செவிசாய்ப்பார்களா????? வேறு ஒரூவரும் தேவை இல்லை மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் திரு கனிமொழி கருணாநிதி அவர்கள் மனது வைத்தால் மட்டுமே முடியும்.தூத்தேக்குடி மக்களின் ஆவல் நிறைவேற்ற வேண்டும்.
சிவா கோவில்பட்டிSep 25, 2024 - 09:42:29 PM | Posted IP 162.1*****
மிகவும் முக்கியமான கோரிக்கை விடுத்துள்ளனர், தயவுசெய்து தென்னக ரயில்வே அதிகாரிகள் இந்த கோரிக்கையை ஏற்று ஆவண செய்ய வேண்டும்
MuthuSep 25, 2024 - 06:58:56 PM | Posted IP 162.1*****
சொல்ல போனால் நமது தூத்துக்குடி மட்டுமே ராயில் சேவையில், மிகவும் பின் கு தங்கி உள்ளது, இரவு பகல் நேரத்தில் பேருந்து வசதி இல்லை, அதை சரி செய்ய வேண்டும், பகல் நேர train சென்னை கு, அவசியமான ஒன்று,,
AisuSep 25, 2024 - 03:00:29 PM | Posted IP 172.7*****
Need another train from Chennai to Thoothukudi daily.
K. SelvarajSep 25, 2024 - 01:47:10 PM | Posted IP 162.1*****
பகல் நேர ரயில் அனைவருக்கும்
பயனுள்ளதாக இருக்கும்
RajanSep 25, 2024 - 10:33:50 AM | Posted IP 162.1*****
We needed new train in day time to Chennai because of population and tuty growth....
JayaretnakumarSep 25, 2024 - 10:02:37 AM | Posted IP 172.7*****
தமிழகத்தின் இரண்டாவது பெரிய இண்டஸ்ட்ரி ரியல் சிட்டி தூத்துக்குடி.இது ஆகாய, கடல்,சாலை, ரயில் இவைகளால் இணைக்கப்பட்டுள்ளது.மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் பலர் இங்கு பயிற்சி எடுத்தவர்கள்.ஆனால் சென்னையிலிருந்து இங்கு வருவதற்கு ஒரே ஒரு இரயில்.இரயில்வே இதனைக் கண்டு கொள்ளுமா?
பிரதம மந்திரி welfare association.
தூத்துக்குடி.
செய்யதுஉமர்Sep 25, 2024 - 09:49:23 AM | Posted IP 162.1*****
சென்னை தூத்துக்குடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் திருசெந்தூர் உடன்குடி திசையன்விளை வழியாக கண்ணியாகுமரிக்கு எப்போது ரயில் சேவை நடைபெறும்
GOPAPATHY .ASep 25, 2024 - 06:02:02 AM | Posted IP 162.1*****
திருவனந்தபுரம் கண்ணூர் ஜனசதாப்தி ரயில் ஒரு ரேக் கொண்டு இயக்கப்படுகிறது. தூத்துக்குடி சென்னை இடையே இயக்கப்படும் பட்சத்தில் வாரம் மூன்று நாட்கள் மட்டுமே இயக்க வாய்ப்பு.பயண நேரம் சுமார் 8 மணி நேரமாக இயக்கும் பட்சத்தில் வாரத்தில் 6 நாட்கள் இயக்க வாய்ப்பு.
RaviSep 25, 2024 - 01:56:37 AM | Posted IP 162.1*****
Tuticorin to Chennai need another train.(morning or night)
நிஷாSep 25, 2024 - 01:47:48 AM | Posted IP 162.1*****
கூடிய விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.
RAMAR P BRAYANT NAGAR 11TH ST TUTICORINSep 25, 2024 - 12:33:15 AM | Posted IP 172.7*****
திருவனந்தபுரம் திருச்சி இன்டர் சிட்டி ரெயிலை இரு மார்க்கத்திலும் தூத்துக்குடி வழியாக திருச்சி - தூத்துக்குடி - திருவனந்தபுரம் இன்டர் சிட்டி ரெயிலாக இரு மார்க்கத்திலும் இயக்க வேண்டும். பயணியர் சங்கம் முயற்சி செய்யவும்
மாரிச்செல்வம்Sep 25, 2024 - 12:14:50 AM | Posted IP 172.7*****
இதைப் பற்றி தினமும் நான் Railmadad app ல் புகாரை அனுப்பிக்கொண்டே இருக்கிறேன். ஆனால் ரயில்வே துறையினர் எந்த ஒரு நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.
Uppathur SrinivasanSep 24, 2024 - 10:40:55 PM | Posted IP 162.1*****
Yes , Thoothukudi needed additional day train to Chennai Egmore,and so ThoothukudiVijayawada Expresses have to be provided,both trains travel day time in Chennai Egmore Thoothukudi.
R.UmaSep 24, 2024 - 08:26:29 PM | Posted IP 172.7*****
Tuticorin to Chennai needs another train.
ஆனந்தSep 24, 2024 - 07:57:36 PM | Posted IP 162.1*****
கண்டிப்பாக தூத்துக்குடி சென்னை மார்க்கமாக முத்து நகர் தவிர்த்து இன்னோரு பயணிகள் ரயில் இயக்கப்பட வேண்டும்.. தூத்துக்குடி தற்போது வளர்ந்து வரும் மாவட்டமாக மாறிக் கொண்டே வருகிறது. நானும் இதுவரை பலமுறை முத்து நகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து இருக்கிறேன் ஒரு முறை கூட கன்பார்ம் ஆனது இல்லை..
P. கண்ணன்Sep 24, 2024 - 07:20:49 PM | Posted IP 172.7*****
நெல்லை டூ தூத்துக்குடி ரயிலை வாஞ்சிமணியாச்சி பைபாஸ் வழியாக திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்தால் மூன்றுமாவட்ட மக்களும் பயன்பெறுவார்கள் ரயில்வே நிருவாகம் விரைந்து நிறைவேற்றிதந்தால் மக்களை மகிழ்ச்சி பெறுவார்கள்
Sakthivel @ TuticorinSep 24, 2024 - 06:41:26 PM | Posted IP 162.1*****
Thiruvananthapuram to Tirunelveli Junction all derminated trains are Extended to Tuticorin very very useful for Thoothukudi Rail Passengers kindly request sir
ராஜாராம்Sep 24, 2024 - 02:38:06 PM | Posted IP 162.1*****
நல்ல கோரிக்கை. கனிமொழி MP விமான விரிவாக்கம் மட்டும்தான் கவனிப்பார். ஏழைகள், நடுத்தரம் பயன்படுத்துவது இரயில் தான். உங்கள் கோரிக்கை நிறைவேற வாழ்த்துக்கள்.
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)











அய்யப்பன்Sep 26, 2024 - 01:07:34 PM | Posted IP 162.1*****