» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துறைமுக வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்: தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

செவ்வாய் 27, ஆகஸ்ட் 2024 9:22:30 PM (IST)



இந்தியா முழுவதும் நாளை 12 துறைமுகங்களில் நடைபெற இருந்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

மத்திய கப்பல் துறை அமைச்சகம் தொழிற்சங்கத்துடன் நடந்த பேச்சு வார்த்தையில் சமூக தீர்வு ஏற்பட்டதால் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால் தூத்துக்குடி துறைமுகத்தில் நாளை காலை வழக்கம் போல் வேலைகள் நடக்கும் என்று அனைத்து தொழிற்சங்கம் சார்பில் நிர்வாகிகள் அறிவித்தனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை முன்னிட்டு தூத்துக்குடியில் துறைமுக தொழிலாளர்கள் பழைய துறைமுக வாயிலில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். நிகழ்ச்சியில் ஐ.என்.டி.யு.சி அமைப்பு செயலாளர் கதிர்வேல், ஜனநாயக ஊழியர் சங்க தலைவரும், லேபர் டிரஸ்டியுமான பாலகிருஷ்ணன், பொதுச் செயலாளர் காசி, துணைத்தலைவர் ரசல், எச்.எம்.எஸ் தலைவர் சுரேஷ், எச்.எம்.எஸ் (ஒர்க்கர்ஸ்) தலைவர் ஜான்கென்னடி, பெட் யூனியன் பொதுச் செயலாளர் கனகராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்

வெள்ளி 13, செப்டம்பர் 2024 3:09:28 PM (IST)

Sponsored Ads


Arputham Hospital








Thoothukudi Business Directory