» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பருவமழை முன் எச்சரிக்கை பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு கருத்தருங்கு!

செவ்வாய் 27, ஆகஸ்ட் 2024 4:50:44 PM (IST)



தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை, பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. 

தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு, பேரிடர் மேலாண்மை அறக்கட்டளை சார்பில் பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை, பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.தட்சணாமூர்த்தி தலைமை வகித்தார். துளசி சோசியல் சர்வீஸ் டிரஸ்ட் இயக்குனர் எஸ். தனலெட்சுமி நியூ பாசக்கரங்கள் முதியோர் இல்ல நிர்வாக இயக்குனர் ஏ.முத்துப்பாண்டியன்,பசுமை படை ஆசிரியர் டி. ஐசையா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

முன்னதாக முதுநிலை ஆசிரியர் எஸ். மரகதவள்ளி வரவேற்றுப் பேசினார். பேரிடர் மேலாண்மை   அறக்கட்டளை மேலாண்மை இயக்குனர்  எம்.ஏ.தாமோதரன் கலந்து கொண்டு பருவமழை காலங்களில் ஏற்படும்  புயல், சூராவளி,கடல் சீற்றம், தொடர் மழையினால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு, இடி, மின்னல் போன்ற பேரிடர் காலங்களில் முன் எச்சரிக்கையுடன் எவ்வாறு செயல்படுவது, பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு அவர்களுக்கு எந்த மாதிரி முதலுதவி அளிக்க வேண்டும் என்பவை குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளித்தார். 

கருத்தரங்கில் நாட்டு நலப்பணித்திட்ட ஆசிரியர் எம்.சுப்பிரமணிய சுபாஸ், உடற்கல்வி ஆசிரியர் ஆர்.அருள்முருகன், பேரிடர் மேலாண்மை அறக்கட்டளை அறங்காவலர் டி.முருகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக தாயகம் அறக்கட்டளை இயக்குனர் வி. ஜெயக்கனி நன்றி கூறினார். இக்கருத்தரங்கின் மூலமாக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயன் பெற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்

வெள்ளி 13, செப்டம்பர் 2024 3:09:28 PM (IST)

Sponsored Ads

Arputham Hospital









Thoothukudi Business Directory