» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அனுமதியின்றி வண்டல் மண் அள்ளிச்சென்ற 27 டிராக்டர்கள் பறிமுதல்: டிஎஸ்பி அதிரடி

திங்கள் 19, ஆகஸ்ட் 2024 4:11:42 PM (IST)



கடம்பாகுளத்தில் இருந்து டிராக்டர்களில் அனுமதியின்றி வண்டல் மண் அள்ளிச்சென்ற 27 டிராக்டர்களை டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட கடம்பா குளத்தில் இருந்து விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் அல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், கடம்பாக்குளத்தில் இருந்து  நீர்வளத் துறையினரின் உரிய அனுமதி சீட்டு இன்றி டிராக்டர்களில் வண்டல் மண் அள்ளி ஆழ்வார்திருநகரி பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்து வந்தனர்.  

ஞாயிற்றுக்கிழமை குளங்களிலிருந்து மண் அள்ளப்படுவதில்லை என்பதால் செங்கல் சூளைகளுக்கு எதிரே நெல்லை திருச்செந்தூர் சாலை ஓரத்தில் நீண்ட வரிசையில் சனிக்கிழமை இரவில் 30க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் விபத்தை ஏற்படுத்தும் விதமாக நிறுத்தப்பட்டிருந்தது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஸ்ரீவைகுண்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் ஆழ்வார்திருநகரி பகுதியில் உள்ள செங்கல் சூளைகளில் ஆய்வு செய்தனர். 

அப்போது கடம்பா குளத்தில் இருந்து 27 டிராக்டர்களில் மண் அள்ளி செங்கல் சூளைக்கு கொண்டு வந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து தனிப்படி போலீசார் 27 டிராக்டர்களின் பறிமுதல் செய்து ஆழ்வார் திருநகரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விவசாயத்திற்கு மண் அள்ள கடம்பா குளத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் உரிய அனுமதி சீட்டு இன்றி ஒரே நேரத்தில் 27 டிராக்டர்கள் செங்கல் சூளைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

JohnAug 19, 2024 - 07:43:29 PM | Posted IP 162.1*****

Kamba kulam oru kurupita samugam mattum sontham kondadi mattra samuthaya makkale anumathikamal kulathai kanmudi hanumanga soori adikondru irukirargal ... Keel mattum muthal mel mattam varai avargal than

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





CSC Computer Education



Thoothukudi Business Directory