» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஐடிஐகளில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு: ஆட்சியர் ஸ்ரீதர் தகவல்

செவ்வாய் 11, ஜூன் 2024 10:47:42 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் ஐடிஐயில் மாணவர் சேர்க்கைக்கு வரும ஜீன் 13-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது. தற்போது மாணவர் சேர்க்கைக்கு வரும் ஜீன் 13-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2024-25-ம் ஆட்டிற்கான அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 

மாணவர்கள் தங்களின் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், கைப்பேசி எண், இ-மெயில் முகவரி, ஆதார் அட்டை மற்றும் முன்னுரிமை கோரினால் அதற்கான முன்னுரிமைச் சான்றிதழ், பாஸ்போர்ட்அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கோணம், நாகர்கோவில். அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், மகளிர் (SMRV), நாகர்கோவில் ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்களிலுள்ள உதவி மையம் மூலமாகவும், தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், கோணம், நாகர்கோவில் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.50 மட்டுமே. டெபிட் கார்டு, ஜிபே அல்லது நெட் பேக்கிங் மூலம் செலுத்தலாம்.

பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.750, பாடநூல், சைக்கிள், சீருடை, வரைபடக்கருவி, காலணி, இலவச பேருந்து பயண அட்டை, புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பெண் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


Thoothukudi Business Directory