» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு : தூத்துக்குடியில் மாணவ, மாணவிகள் உற்சாகம்!

திங்கள் 10, ஜூன் 2024 10:11:43 AM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர். 

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. தூத்துக்குடியில் உற்சாகமுடன் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் கனிவுடன் வரவேற்றனர். பள்ளி திறந்த முதல் நாளிலேயே இலவச பாடநூல்கள், நோட்டுகளை வழங்க தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து சுமார் ஒன்றரை மாதங்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டதால் வெறிச்சோடிக் கிடந்த சாலைகள் பள்ளி மாணவ, மாணவிகள் வருகையால் மீண்டும் சுறுசுறுப்பாயின.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham HospitalThoothukudi Business Directory