» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவா் சேர்க்கை சிறப்பு முகாம்

வெள்ளி 7, ஜூன் 2024 5:40:06 PM (IST)தருவைக்குளம் பகுதியில் இடைநின்ற மாணவா்கள் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேருவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.  

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஒன்றியத்திற்குட்பட்ட தருவைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி இடை நின்ற மாணவா்களுக்கான தொழிற்கல்வி சிறப்பு முகாம் நடைபெற்றது. தலைமை ஆசிாியா் அன்றோ ரூபன் அவா்கள் அரசு தொழிற்பயிற்சி கல்லூாிகளில் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் தொழிற்கல்வி முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தாா். 

முகாமில் ஏராளமான இடைநின்ற மாணவா்கள் தத்தம் பெற்றோா்களுடன் கலந்து கொண்டு விரும்பிய தொழிற் கல்வியினை தோ்வு செய்தாா்கள் 16 மாணவா்கள் தொழிற்கல்வி நிலையத்திலும் (ITI) 2 மாணவா்கள் கேட்டாிங் கல்லூாியிலும்  3 மாணவா்கள் தொழிலற்நுட்ப கல்லூாியிலும் மற்றும் ப்ளஸ் 2 மாணவியா் செவிலியா் பயிற்சியிலுமாக மொத்தம் 23 மாணவ  மாணவியா் தோ்வு செய்தனா்.

முகாமிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிாிய பெருமக்கள் பெற்றோா் ஆசிாியா் கழகத் தலைவா் அமலதாசன் பள்ளி மேலான்மைக்குழு உறுப்பினா்கள் மற்றும் ஊா் முக்கிய ஊா் பிரமுகா்கள் செய்திருந்தனா். முகாமினை நிறைவாக பள்ளி உதவி தலைமையாசிாியை சுமதி உடற்கல்வி ஆசிாியா் ரவிகாந்த்  மற்றும் ஆசிாியா் பயிற்றுனா் செல்வக்குமாா் ஆகியோா் முகாமில் பங்கேற்ற கல்லூாிகளின் ஆசிாியா்களுக்கும் பெற்றோா்க்கும் மற்றும் மாணவா்களுக்கும் நன்றி தொிவித்தனா்.


மக்கள் கருத்து

Sharmilabanu. MJun 9, 2024 - 06:28:23 AM | Posted IP 172.7*****

Impartent trade 2024

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

Thoothukudi Business Directory