» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூரில் திடீர் கடல் சீற்றம்: அலையில் சிக்கி 10 பக்தர்கள் காயம்
திங்கள் 3, ஜூன் 2024 8:32:09 AM (IST)
திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் கடல் சீற்றம் காரணமாக எழுந்த ராட்சத அலையில் சிக்கி 10 பக்தர்கள் காயம் அடைந்தனர்.
வார விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த தினமான நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கடலில் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து முருக பெருமானை தரிசித்தனர். சுபமுகூர்த்த தினம் என்பதால் 50-க்கும் மேற்பட்ட திருமணங்களும் நடைபெற்றது. இதனால் கோவில் வளாகம், கடற்கரையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இந்த நிலையில் மதியம் கடலில் பக்தர்கள் புனித நீராடிக் கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று கடலில் சீற்றம் ஏற்பட்டது. இதனால் சுமார் 8 அடி உயரம் வரையிலும் எழும்பிய ராட்சத அலைகள் கரையில் வேகமாக மோதி சென்றன. அப்போது கடலில் புனித நீராடிய சில பக்தர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் காயமடைந்தனர்.
இதில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 64), கரூரைச் சேர்ந்த தங்கம் (54), கோவையைச் சேர்ந்த கண்ணம்மா (70), விருதுநகரைச் சேர்ந்த பாக்கியலட்சுமி (40), தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துமாரி (22) உள்ளிட்ட 10 பக்தர்கள் காயமடைந்தனர். இதில் சில பக்தர்களுக்கு காலில் எலும்புமுறிவு ஏற்பட்டது.
உடனே அவர்களை சக பக்தர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். கோவில் கடல் பாதுகாப்பு குழுவினர், போலீசார் விரைந்து சென்று, காயமடைந்த பக்தர்களை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி, கோவில் வளாகத்தில் உள்ள முதலுதவி மையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்களை திருச்செந்தூர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவத்தால் திருச்செந்தூரில் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










