» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் தீக்குளித்த மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு!
புதன் 29, மே 2024 8:08:15 PM (IST)
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் உடலில் டீசல் ஊற்றி தீக்குளித்த மின்வாரிய ஒப்பந்த ஊழியர் சிகிச்சை பலினின்றி இறந்தார்
தூத்துக்குடி முத்தையாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ஞானமுத்து(48). மின்வாரிய ஒப்பந்த தொழிலாளி. இவர் தினசரி மது அருந்திவிட்டு வீட்டுக்கு செல்வாராம். இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதுபோல் நேற்றிரவு ஏற்பட்ட தகராறில் மணமுடைந்த ஞானமுத்து தனது உடலில் டீசல் உற்றி தீ வைத்துக்கொண்டார்.
இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஞானமுத்து சிகிச்சை பலனளிக்காமல் இன்று மாலை உயிரிழந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்