» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாணவர்களுக்கான ஆதார் சிறப்பு முகாமில் குளறுபடி பொதுமக்கள் அவதி...!!
சனி 25, மே 2024 8:01:39 PM (IST)

தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான ஆதார் சிறப்பு முகாம் முறையான பணியாளர்கள் நியமனம் செய்யப்படாததால் குழந்தைகளுடன் வந்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தூத்துக்குடி சிவ அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி குழந்தைகளுக்கான ஆதார் கார்டு சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு முகாமில் புதிதாக ஆதார் கார்டு எடுப்பவர்களுக்கு புகைப்படம் மற்றும் கைரேகை பதிவு மற்றும் புதுப்பித்தல் ஆகியவை செய்யப்படுகின்றன.
இந்த ஆதார் கார்டு சிறப்பு முகாம் குறித்து முறையான அறிவிப்பு இல்லாத காரணத்தினால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் ஆதார் மையத்தில் சிறப்பு முகாமில் புகைப்படம் எடுக்க குவிந்தனர். நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆதார் சிறப்பு முகாமிற்கு வந்த நிலையில் பவர் கட் காரணமாக வந்த பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதை தொடர்ந்து இன்று காலை முதல் ஏராளமான பொதுமக்கள் ஆதார் சிறப்பு முகாமிற்கு வந்திருந்தனர் ஆனால் ஒரு குறிப்பிட்ட சில பொதுமக்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கிவிட்டு மற்ற நபர்களை இனி திங்கட்கிழமை வரச்சொல்லி திருப்பி அனுப்பினர். இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பியதுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
முறையான அறிவிப்பு இல்லாமல் தாங்கள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றம் சாட்டிய பொதுமக்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தாங்கள் குழந்தைகளை இந்த மழைக்காலத்தில் அழைத்து கொண்டு வரும் சூழ்நிலை இருப்பதால் மாவட்ட நிர்வாகம் அந்தந்த பகுதிகளில் இந்த ஆதார் சிறப்பு முகாமை அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:34:19 PM (IST)

போக்சோ வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:03:25 PM (IST)
_1739287857.jpg)
காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் தகவல்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:59:57 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் தெப்பத்திருவிழா : திரளான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:40:46 PM (IST)

புளியம்பட்டி அந்தோணியார் ஆலயத் திருவிழா: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:40:44 PM (IST)
