» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகம் திறப்பு விழா
புதன் 15, மே 2024 3:36:39 PM (IST)
தூத்துக்குடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மத்திய மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகம் திறப்பு விழா இன்று திருச்செந்தூர் மெயின் ரோடு சிவந்தாகுளம் அருகே கட்சியின் மாவட்ட செயலாளர் ஆட்டோ கணேசன் தலைமையில் நடைபெற்றது. இளைஞர் சிறுத்தை எழுச்சி பாசறை மாநிலத் துணைச் செயலாளர் விமல் வங்காளியார் முன்னிலை வகித்தார். கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் கலைவேந்தன் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
முன்னதாக விழாவிற்கு வருகை தந்த சிறப்பு அழைப்பாளர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். திறப்பு விழாவில் மத்திய மாவட்ட துணைச் செயலாளர் மாரிமுத்து, தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் விஜி, மாவட்ட செய்தி தொடர்பாளர் செல்வகுமார், 49ஆவது வார்டு செயலாளர் அந்தோணிசாமி உள்ளிட்ட கட்சியின் மத்திய மாவட்ட, ஒன்றிய, நகர, முகாம், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.