» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிப்பு - ஆட்சியர் ஆய்வு

வியாழன் 18, ஏப்ரல் 2024 5:32:58 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள வெப் கேமராக்களை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு 19.04.2024 நாளன்று பாராளுமன்ற பொது தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் 28 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு 19.04.2024 அன்று காலை 7 மணிக்கு தொடங்கு மாலை 6 மணி வரை நடைபெறும்.  மொத்தம் 1,624 வாக்குச்சாவடிகளில் 14,58,430 வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள வெப் கேமராக்களை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் மூன்றாம் தளத்தில் உள்ள முத்து அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் கோ. லட்சுமிபதி  இன்று (18.04.2024) பார்வையிட்டார். உடன் வாக்காளர் பதிவு அலுவலர் / தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன்,மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ச.அஜய் சீனிவாசன் ஆகியோர் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

Thoothukudi Business Directory