» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் தீத்தொண்டு நாள்: தீயணைப்புப் படை வீரா்களுக்கு அஞ்சலி!
திங்கள் 15, ஏப்ரல் 2024 8:17:48 AM (IST)

தூத்துக்குடியில், தமிழ்நாடு தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறை சாா்பில் தீத்தொண்டு நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் தீயணைப்பு துறை சாா்பில் தீவிபத்து- மீட்புப் பணியின்போது வீரமரணமடைந்த வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தீத்தொண்டு நாள் ஆண்டுதோறும் ஏப். 14இல் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, தூத்துக்குடியில் உள்ள நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பணியின்போது உயிரிழந்த அலுவலா்கள், பணியாளா்களின் நினைவாக அங்குள்ள நினைவு ஸ்தூபிக்கு மாவட்ட அலுவலா் மனோ பிரசன்னா மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.
இதுகுறித்து மாவட்ட அலுவலா் கூறும்போது, ஆண்டுதோறும் மத்திய அரசால் ஒவ்வொரு தலைப்பின் அடிப்படையில் தீத்தொண்டு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, நிகழாண்டு ‘நாட்டின் கட்டமைப்பைப் பேணிக் காப்பதற்கு, தீத்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதனை உறுதிசெய்வோம்’ என்ற தலைப்பில் இம்மாதம் 20ஆம் தேதிவரை கடைப்பிடிக்கப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் ஒரு வாரத்துக்கு பொதுமக்கள் கூடுமிடம், தொழிற்சாலைகள், குடிசைப் பகுதிகளுக்கு சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். தீத்தடுப்பு குறித்து சொற்பொழிவு, துண்டுப் பிரசுர விநியோகம், மாதிரிப் பயிற்சி நடத்துதல் ஆகியவை மேற்கொள்ளப்படும் என்றாா். நிகழ்ச்சியில் உதவி மாவட்ட அலுவலா்கள் ராஜு, நட்டாா் ஆனந்தி, தூத்துக்குடி நிலைய அலுவலா் (போக்குவரத்து) அருணாசலம், தீயணைப்பு வீரா்கள் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:34:19 PM (IST)

போக்சோ வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:03:25 PM (IST)
_1739287857.jpg)
காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் தகவல்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:59:57 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் தெப்பத்திருவிழா : திரளான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:40:46 PM (IST)

புளியம்பட்டி அந்தோணியார் ஆலயத் திருவிழா: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:40:44 PM (IST)
