» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாக்குசாவடி பணியாளர்களுக்கு தொகுதி ஒதுக்கீடு
செவ்வாய் 2, ஏப்ரல் 2024 4:14:03 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடி பணியாளர்களின் இரண்டாம் கட்ட ரேண்டமைசேசன் இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடி பணியாளர்களின் இரண்டாம் கட்ட ரேண்டமைசேசன் இன்று தேர்தல் பொது பார்வையாளர் திவேஷ் ஷெஹரா முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் வாக்குச்சாவடியில் தேர்தல் பணியாற்றும் கீழ்கண்ட விபரப்படியான பணியாளர்களுக்கு, தொகுதி ஒதுக்கீடு மற்றும் அணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. வாக்குச் சாவடி தலைமை அலுவலர் - 1947, வாக்குச் சாவடி அலுவலர் 1 - 1947 வாக்குச்சாவடி அலுவலர் 2 - 1947 வாக்குச்சாவடி அலுவலர் 3 - 1947, வாக்குச் சாவடி அலுவலர் 4 (1200 வாக்காளர்களுக்கு மேல்) 238 என மொத்தம் 8026 பணியாளர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டனர்.
மாற்று திறனாளி வாக்காளர்கள் (PWD) தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வாக்கு சாவடி எண் 42 தி விகாசா பள்ளியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மட்டும் ரேண்டம் முறையில் அல்லாமல் தனியாக ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. மேற்கண்ட விபரப்படி தொகுதி ஒதுக்கீடு மற்றும் அணி ஒதுக்கீடு செய்யப்பட்ட நபர்களுக்கு , வருகிற 7ஆம் தேதி கீழ்கண்ட பயிற்சி மையங்களில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
213.விளாத்திகுளம்: சி.கே.டி. பள்ளி, குமாரகிரி, எட்டயபுரம்
214.தூத்துக்குடி காமராஜ் கல்லூரி, தூத்துக்குடி
215.திருச்செந்தூர்: ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வீரபாண்டியன் பட்டணம், திருச்செந்தூர்
216.ஸ்ரீவைகுண்டம் : கே.ஜி.எஸ் மேல்நிலைப்பள்ளி
217.ஒட்டப்பிடாரம் (தனி) ஜான் டி பாப்பிஸ்ட் பள்ளி, புதியம்புத்தூர்
218.கோவில்பட்டி: நாடார் மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு யாகம்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 12:34:09 PM (IST)

காவல்துறையினருக்கான முழு உடல் பரிசோதனை முகாம்: எஸ்பி ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்தார்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 12:30:25 PM (IST)

பைக்குகள் மோதல்: கல்லூரி முதல்வர், மாணவர் பலி; மேலும் ஒருவர் படுகாயம்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:24:20 AM (IST)

செருப்பு கடையில் திடீர் தீவிபத்து : பல லட்சம் மதிப்புள்ள காலணிகள் எரிந்து சேதம்
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:20:23 AM (IST)

டிரைவரைத் தாக்கி ஆட்டோ கடத்தல்: 3 பேர் கைது!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:18:21 AM (IST)

தூத்துக்குடியில் மீன்கள் வரத்து குறைவு: விலை உயா்வு!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:10:16 AM (IST)
