» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி : ரயில் சேவையில் மாற்றம்!!

புதன் 13, மார்ச் 2024 11:08:35 AM (IST)



தூத்துக்குடி ரயில் நிலையத்தில் முதல் பிளாட்பாரத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் 2வது பிளாட்பாரத்தில் ரயில்கள் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் முதல் பிளாட்பாரத்தில் இருந்து முத்துநகர் எக்ஸ்பிரஸ், பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்கிறது. 2வது பிளாட்பாரத்தில் நெல்லை பாசஞ்சர் ரயில்கள் நின்று செல்லும். இந்நிலையில் முதல் பிளாட்பாரத்தில் தண்டவாளங்கள் அமைத்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் தண்டவாளத்தை மாற்றும் பணி நடந்து வருகிறது. 

இப்பணிகள் நேற்று துவங்கியது. வரும் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனால் முத்துநகர் மற்றும் பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில்கள் 2வது பிளாட்பாரத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2வது பிளாட்பாரத்திற்கு நடை மேடையில் சுமார் 100 படிகள் ஏறி இறங்க வேண்டும். இதனால் முதியார்கள் மற்றும் மாற்றித்திறனாளிகளுக்காக 1வது ரயில்வே கேட் வழியாக 2வது பிளாட்பாரத்ததிற்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

ரயில் சேவையில் மாற்றம்:

தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் (17.03.24, 24.03.24 மற்றும் 31.03.24) ரயில் சேவையில் மாற்றம்:

1) வண்டி எண் 06668 திருநெல்வேலி - தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. 

2) வண்டி எண் 06667 தூத்துக்குடி - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் சிறப்பு (முன்பதிவு இல்லாதது) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது

3) வண்டி எண் 19567(விவேக் எக்ஸ்பிரஸ்) ஞாயிறு இரவு 11.35 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக  திங்கட்கிழமை  அதிகாலை 01.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

KailashMar 14, 2024 - 04:39:05 PM | Posted IP 162.1*****

Our Railway passengers welfare Association social organizations don't fight against indifferent attitude of Railway ministry andSouthern Railway Zonal office and Madurai Divisional office towards out Port city Even though Railway generate huge income from Tuticorin, Railway consider Tuticorin as village level station only by refusing preexisting meter guage trains e. G Tuticorin coimbatore fast passenger and Chennai main line Janata Express Now even after the approval by railway board for Tuticorin Palghat and Tuticorin Mettupalayam service zonal office not interested in starting new services In this zone Tuticorin is the only railway station without overbridge and electric car facility for the benefit of passenger Railway Division office doesn't show interest in operating Tirunelveli passenger from Melur station durng the maintenance work at Keezhur Wr must fight collectively against the indifferent attitude of Railway ministry and Zonal and Divisional office

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory