» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அமமுக சார்பில் ஜெ.பிறந்த நாள் விழா

சனி 24, பிப்ரவரி 2024 3:23:38 PM (IST)தூத்துக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மாநகர் மாவட்ட அமமுக சார்பில், மாவட்ட செயலாளர் பிரைட்டர் தலைமையில், மகளிர் அணி துணைச் செயலாளர் சண்முக குமாரி, மாவட்ட அம்மா பேரவை தலைவர் குமார் ஆகியோர் முன்னிலையில் பழைய முனிசிபல் அலுவலகம் முன்பு அலங்கரித்து அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின்  திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் தங்க மாரியப்பன், மாவட்ட துணைச்செயலாளர் முனியசாமி, முத்தையாபுரம் பகுதி செயலாளர் மதன் குமார், மாவட்ட இதய தெய்வம் அம்மா தொழிற்சங்க பேரவை துணைச் செயலாளர் அகஸ்டின் மற்றும்  நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital
Thoothukudi Business Directory