» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் புதிய மேம்பாலம் : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!
செவ்வாய் 13, பிப்ரவரி 2024 11:11:25 AM (IST)
தூத்துக்குடியில் 5வது ரயில்வே கேட் மற்றும் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாநகராட்சி பகுதி சபா உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம், தூத்துக்குடி கீதா ஹோட்டலில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி வார்டுகளில் 60 செயல்படுத்தப்பட்ட பணிகள், செயல்படுத்தப்பட உள்ள பணிகள், தேர்தல் கள நிலவரம் ஆகியவை குறித்து ஆலோசனை மேயர் நடத்தினார்.
அப்போது, தூத்துக்குடி மாநகராட்சியில் வெள்ள நிவாரண பணிகளை சிறப்பாக மேற்கொண்ட மேயருக்கு சபா உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர். பின்னர் மேயர் பேசும்போது, தூத்துக்குடி விஎம்எஸ் நகரில் 5வது ரயில்வே கேட் மற்றும் மேம்பாலம் அமைய உள்ளது. இதன் மூலம் சங்கரப்பேரி வழியாக மதுரை பைபாஸ் ரோட்டிற்கு பொதுமக்கள் விரைவாக செல்லலாம்.
இதற்கான அனுமதியை கனிமொழி எம்.பி., பெற்றுத் தருவார். மாநகராட்சி நிதி மூலம் இப்பணிகள் நடைபெறும். தூத்துக்குடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்போது பிரசவங்கள் நடைபெற்று வருகிறது. இதற்காக கூடுதல் வசதியாக அறுவை சிகிச்சை அரங்கம் அமைக்கப்பட உள்ளது. மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்படும்.
வருங்காலங்களில் எவ்வளவு மழை பெய்தாலும், தூத்துக்குடியில் மழை நீர் தேங்காது. தூத்துக்குடி மாநகராட்சி ஒளிரும் மாநகராட்சியாக மாற்ற தேவைப்படும் இடங்களில் உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. அனுமதிக்கப்பட்ட சாலைப்பணிகள் உடனடியாக செயல்படுத்தப்படும். மற்ற பணிகள் மே மாதத்தில் தொடங்கும். மாநகராட்சியின் சாதனைகளை பகுதி சபா உறுப்பினர்கள் மக்களிடம் எடுத்துக்கூறி, தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றுத்தர வேண்டும் என்றார். இக்கூட்டத்தில் பகுதி சபா உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
RajeshFeb 14, 2024 - 07:06:08 PM | Posted IP 172.7*****
Water pipe line project pathula ungaloda plan nalluava therithu sattam olunku nu monthly bookla ungaloda 5 Crore hdpe thirutu pathium Thoothukudi flood vanthua evalu pathipu irukanum sonuna mathiriaya nadanthuchu Ippa ennana Thirutana Hdpe pipea podua mathiriaya athukula Kasua corporation irunthu vangitu irukanaga tcmc rmpa Mosama poitu iruku
S RAMAMOORTHYFeb 14, 2024 - 03:45:10 PM | Posted IP 172.7*****
IN MELUR NEAR PATRAKALIAMMAN TEMPLE A RAILWAY FLYOVER NECESSARY FOR SCHOOL STUDENTS OF V G.S AND STAR SCHOOL, C.M. SCHOOL. THIS PLAN ALREADY PROMISED BY SMT. GEETHA JEEVAN AND SRI
KANIMOZHI M.P. 6 MONTHS AGO
BalamuruganFeb 14, 2024 - 03:18:02 PM | Posted IP 172.7*****
ஸ்டேசன மீளவிட்டானுக்கு மாற்ற சொல்றவங்களின் வீடுகளைதான் அங்கு கொண்டுபோக சொல்ல வேண்டும் அப்டினா இந்தியா முழுவதும் நகரில் உள்ள ஸ்டேசன்களை மாற்றமுடியுமா, மேயர் அவர்கள் மேலூர் ரயில்நிலையத்தை புதியபேருந்து நிலையம் அருகே அமைத்ததற்கு நன்றி அனைத்து ரயில்களும் நின்றுசெல்லவும் தூத்துக்குடி மேலூர் ரயில்நிலையத்தில் புக்கிங் கவுன்டர் அமைத்திட ஆவணசெய்ய வேண்டும்.
tamilanFeb 14, 2024 - 01:37:02 PM | Posted IP 172.7*****
ஒன்றாம் கேட் முதல் நாலாவது கேட் வரை அகற்றி விட்டு அந்த இடத்தில் தார் சாலை அமைத்தால் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் யோசியுங்கள் தூத்துக்குடி அரசியல்வாதிகளே!
PremFeb 14, 2024 - 10:53:04 AM | Posted IP 172.7*****
The above said is very correct, that Tuty Railway station should be moved to meelavittan. Gates should be removed and grand road should be layed instead of track.
ஏரியாFeb 14, 2024 - 10:27:11 AM | Posted IP 172.7*****
இருக்கிற சிமெண்ட் ரோடுகளில் மண் தேங்கி இருக்கு பொதுமக்கள் வழுக்கி விழ ஆபத்து இருக்கு அதை கண்டுக்க துப்பில்லை. போங்க ஒங்க வேலை எல்லாம்
INBARAJFeb 13, 2024 - 11:29:44 PM | Posted IP 172.7*****
ஸ்டேஷன் மீளவிட்டான்னில் அமைக்கப்பட வேண்டும். 1-ஆம் கேட் முதல் 4-ஆம் கேட் வரை அகற்றிவிட வேண்டும். அவ்விடத்தில் அதற்கு பதிலாக 1-ஆம் கேட் முதல் மீளவிட்டான் வரை சாலை அமைத்தால் மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்
RaviFeb 13, 2024 - 11:26:09 PM | Posted IP 172.7*****
தூத்துக்குடியில் ஏற்கனவே நெருக்கடி அதிகமாக உள்ளது. இதைவிட ரயில்வே ஸ்டேஷனை மீளவட்டானுக்கு கொண்டு செல்லலாம். கலெக்டர் ஆபீஸ் புதுக்கோட்டை வரைக்கும் நீட்டிக்கலாம். புதிய பேருந்து நிலையத்தை குறுக்கு சாலைக்கு கொண்டு செல்லலாம் இவ்வாறு செய்தால் ஊர் நன்றாக விரிவடையும். நம் தூத்துக்குடி மாவட்டம் மிகப்பெரியது ஆனால் நாம் பயன்படுத்துவதோ சிறிய அளவு. இட விலைகளும் குறையும். போக்குவரத்து அகணங்கள் நிறுத்துவதற்கு. திருநெல்வேலி மாவட்டம் போல் நம் மாவட்டமும் பெரிதாகமாறும்
INBARAJFeb 13, 2024 - 11:21:30 PM | Posted IP 172.7*****
ஸ்டேஷன் மீளவிட்டான்னில் அமைக்கப்பட வேண்டும். 1-ஆம் கேட் முதல் 4-ஆம் கேட் வரை அகற்றிவிட வேண்டும். அவ்விடத்தில் அதற்கு பதிலாக 1-ஆம் கேட் முதல் மீளவிட்டான் வரை சாலை அமைத்தால் மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். Set the station in meelavittan. Gate 1 to Gate 4 should be removed. It will be a great help to the people if a road is constructed from the 1st gate to meelavittan instead
நன்றிFeb 13, 2024 - 10:35:33 PM | Posted IP 172.7*****
தூத்துக்குடி நகரத்தை விரிவு படுத்துங்கள். VMS நகரில் ரயில்வே பாலம் தேவையற்ற ஒன்று. சிந்தனை வருங்காலத்தை பற்றி இருக்க வேண்டும். நன்றி
மகேஷ்Feb 13, 2024 - 10:24:45 PM | Posted IP 172.7*****
மேலூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல ஏற்பாடு செய்யுங்கள் மேயர் அவர்களே
V. Umamaheswari, p &t colony 8th street ( east) Tuticorin_8Feb 13, 2024 - 06:59:00 PM | Posted IP 172.7*****
Sir, In the recent flood, Tuticorin, P &T colony 8th street ( East), Near EBEN school road is bad condition. EBEN school is very near to the above road. School going children are going on the damaged road. So at the earliest, please make arrangements to sanction new bitumen road to the P & T colony 8th street ( East) Near EBEN school Tuticorin. Thanks
tamilanFeb 13, 2024 - 06:53:37 PM | Posted IP 172.7*****
இப்படியே ஒவ்வொரு இடத்திலும் ரயில்வே கேட் அமைத்தால் தூத்துக்குடி முழுவதும் கேட் மட்டும்தான் இருக்கும் ரோடு இருக்காது.ஆதலால் தூத்துக்குடி மக்களின் முன்னேற்றத்திற்காக ஒரு தொலை நோக்கு சிந்தனையுடன் கீழுர் ரயில் நிலையத்தை மீளவிட்டானுக்கு கொண்டு சென்றால் தூத்துக்குடி வரலாற்றில் உங்கள் பெயர் என்றும் அழியாது .
பொதுஜனம்Feb 13, 2024 - 11:43:30 AM | Posted IP 172.7*****
Vms நகரில் இருந்து மீளவிட்டான் எவ்வளவு தூரம்? ஸ்டேசனில் மீளவிட்டானுக்கு மாற்றி அனைத்து ரயில் கேட்களையும் திறந்து விரிந்த போக்குவரத்துக்கு உதவுங்கள். டெண்டர் & கமிஷன் பின்னால் போகாமல் மக்கள் நீண்ட கால நலன் கருதி செயல்படவும்
VijayFeb 16, 2024 - 12:25:23 AM | Posted IP 172.7*****