» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இறகுபந்து போட்டியில் தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகம் அணி தங்க பதக்கம் வென்றது!

திங்கள் 12, பிப்ரவரி 2024 3:34:31 PM (IST)


அகில இந்திய பெரிய துறைமுகங்களுக்கிடையேயான இறகுபந்து போட்டியில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் தங்க பதக்கம் வென்றது. 

அகில இந்திய பெரிய துறைமுகங்களின் விளையாட்டு கட்டுபாட்டு குழு மற்றும்  சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுக விளையாட்டு குழுவினரால் சென்னையில் 07.02.2024 முதல் 09.02.2024 வரை அகில இந்திய பெரிய துறைமுகங்களுக்கிடையேயான இறகுபந்து மற்றும் சுண்டாட்டம் (Carrom) போட்டிகள் நடைபெற்றது.

அகில இந்திய பெரிய துறைமுகங்களுக்கிடையே நடைபெற்ற இறகுபந்து போட்டியில் சென்னை, காமராஜர்,  வ.உ.சிதம்பரனார், கொச்சி, நியூமங்களூர், மும்பை, விசாகப்பட்டினம், பாரதீப், கொல்கத்தாவிலுள்ள சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம், கான்ட்;லாவிலுள்ள தீன்தயால் மற்றும் மும்பையில் உள்ள ஜவர்கலால் நேரு துறைமுகம் ஆகிய அணிகள் கலந்து கொண்டன. 

இப்போட்டியானது ஆண்கள் அனைத்து வயதினர் பிரிவு, 45 வயதுக்கு மேற்பட்ட பிரிவு, 50 வயதிற்கு மேற்ப்பட்ட பிரிவு ஆகிய பிரிவுகளுக்கிடையே மூன்று நாட்களாக நடைபெற்றது.

வ.உ.சிதம்பரனார் துறைமுக இறகுபந்து வீரர்  ஜே. ரோஜஸ், 50 வயத்திற்கு மேலுள்ள தனி ஆட்ட பிரிவில் தங்க பதகத்தையும், எ. டக்லஸ் பொன்ராஜ், ஆண்கள் அனைத்து வயதினர் பிரிவில் வெள்ளி பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளனர். மேலும் ஒட்டு மொத்த குழு ஆண்கள் பிரிவில் இரண்டாவது இடத்தையும் பிடித்து வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory