» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மதுபோதையில் பேருந்து கண்ணாடியை உடைத்தவர் கைது!

திங்கள் 12, பிப்ரவரி 2024 3:19:03 PM (IST)

முறப்பநாடு அருகே மதுபோதையில் தனியார் பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியவரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிழக்கு தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் இசக்கி பாண்டி (34) என்பவர் நேற்று வல்லநாடு கலியாவூர் மெயின்ரோடு பகுதியில் ஒரு தனியார் பேருந்தை இயக்கி வந்த போது அங்கு மதுபோதையில் வந்த வல்லநாடு கலியாவூர் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் சின்னதுரை (எ) துரை (43) என்பவர் மேற்படி பேருந்தை வழிமறித்து இசக்கி பாண்டியிடம் தகராறு செய்து தவறாக பேசியதுடன் பேருந்தின் முன்பக்க கண்ணாடியும் கல்லால் உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து பேருந்து ஓட்டுநரான இசக்கி பாண்டி அளித்த புகாரின் பேரில் முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் வழக்கு பதிவு செய்து மேற்படி சின்னத்துரை (எ) துரையை கைது செய்தார். மேலும் இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory