» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வெள்ள மீட்பு பணியில் தூத்துக்குடி மாநகராட்சி : மின் மோட்டார்கள் சென்னைக்கு அனுப்பி வைப்பு!

செவ்வாய் 5, டிசம்பர் 2023 3:29:09 PM (IST)



மிக்ஜாம் புயல் வெள்ள மீட்பு பணிக்காக தூத்துக்குடி மாநகராட்சியில் இருந்து அதிக திறன் கொண்ட மின் மோட்டார்கள் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன.

மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்துள்ள நிலையில், நிலையில் "போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வெள்ள மீட்பு பணிக்காக தூத்துக்குடி மாநகராட்சியில் இருந்து அதிக திறன் கொண்ட மின் மோட்டார்கள் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி கூறும்போது, இந்த இக்கட்டான காலகட்டத்தில் அனைவரும் இணைந்து பணியாற்றி இந்த இயற்கை இடர்ச்சூழலை வென்று வருவோம் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் வார்த்தைக்கிணங்க தூத்துக்குடி மாநகராட்சியின் சார்பாக சக்தி வாய்ந்த மின் மோட்டர்கள், மோட்டார் இயக்கக் கூடிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அனுப்பி வைத்துள்ளோம் என்றார். 

நிகழ்சியில் மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், துணை மேயர் ஜெனிட்டா, பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் பொன்னப்பன், கந்தசாமி, பகுதி செயலாளர் ரவீந்திரன், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors


Arputham Hospital





Thoothukudi Business Directory