» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்: கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்!
சனி 23, நவம்பர் 2024 4:24:38 PM (IST)
செந்தியம்பலத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் சேர்வைக்காரன்மடம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி செந்தியம்பலத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள், வார்டு உறுப்பினர்கள் சார்பாக பெண்கள் கழிப்பிடம், ஊராட்சி நர்சரி அருகில் உள்ளதும், பெண்கள் பொதுமக்கள் விவசாயிகள் மாணவர்களுக்கு இடையூறு அளித்து வரும் டாஸ்மாக் 10144-ஐ அகற்ற வேண்டும் என கிராமசபையில் மனு அளித்து தீர்மானிக்கப்பட்டது
மனு நகலை உடனடியாக முதல்வர், மாவட்ட ஆட்சியர், மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சென்னை, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "காமராஜர் நகர் பெண்கள் கழிப்பிடம் மற்றும் ஊராட்சி பெண்கள் வேலைசெய்யும் நர்சரி உள்ளது. பெண்களுக்கும் மற்றும் விவசாயிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கும் பெரும் தொல்லைகளை அளித்துவருகிறது.
மேலும் தொடர்ந்து இந்த டாஸ்மார் கடை மற்றும் பார் நடத்தும் நபர்களால் பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடைபெறுகிறது.மற்றும் பல்வேறு திருட்டு சம்பவங்கள் இந்த பகுதியில் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்து தொடர்ந்து பொதுமக்கள் நலன் பாதிக்கப்படும் நிலையில் உள்ளதும் பல்வேறு குற்றப்பின்னணி உள்ளவர்கள் மற்றும் சமூக விரோதிகளின் கூடாரமாகும் இந்த டாஸ்மாக் கடை 10144 அகற்றி தருமாறு பெண்கள் பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.