» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோவிலில் யானை தாக்கி இறந்த 2பேர் குடும்பத்திற்கு நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!

சனி 23, நவம்பர் 2024 8:31:14 PM (IST)

திருச்செந்தூர் கோவில் யானை தாக்கி உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள தெய்வானை என்ற யானையின் பாகன்  உதயகுமார் மற்றும் அவருடன் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் 18-11-2024 அன்று யானையின் அருகில் இருந்தபோது யானை திடீரென திமிறி அருகில் இருந்த பாகன் உதயகுமார் மற்றும் சிசுபாலன் ஆகிய இருவரையும் தூக்கி வீசித் தாக்கியுள்ளது. 

இதில், சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார் என்றும், பாகன் உதயகுமார் சிகிச்சை பலனின்றி மருத்துவனையில் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். இச்சம்பவத்தில் உயிரிழந்த உதயகுமார் மற்றும் சிசுபாலன் ஆகிய இருவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா இரண்டு இலட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

New Shape Tailors







Thoothukudi Business Directory