» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அன்னம்மாள் கல்லூரியில் ரீட்ஸ் செயல்முறை விளக்க நிகழ்ச்சி!
வெள்ளி 1, டிசம்பர் 2023 4:05:13 PM (IST)

தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் ரீட்ஸ் என்ற செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்திய ஆங்கில மொழி ஆசிரியர் சங்கத்தின் இந்தியா ரீட்ஸ் என்ற மாணவர்களிடம் படிக்கும் பழக்கத்தினை மேம்படுத்தும் திட்டத்தின் செயல்முறை விளக்க நிகழ்ச்சி தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் இன்று நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் அ.ஜாய்சிலின் சர்மிளா வரவேற்புரை வழங்கினார்.
Language and Literature: A Tool for Social Change என்ற ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூலினை இந்திய ஆங்கில மொழி ஆசிரியர் சங்கத்தின் தேசிய செயலரும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறைத் தலைவருமான (பணிநிறைவு) முனைவர் கே. இளங்கோ வெளியிட, தூத்துக்குடி கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் எம். இளங்குமரன் பெற்றுக்கொண்டார்.
கற்றல் மேலாண்மை அமைப்பின் (LMS) மூலம் படிக்கும் பழக்கத்தை மேம்படுத்துவது பற்றி செயல்முறை விளக்கத்தினை பென்ஹைவ் டெக்னாலஜி பிரைவேட் நிறுவனத்தின் உறுப்பினர் பிரசன்னா பால் ஆனந்த் விளக்கினார். இந்தத் திட்டத்தில் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி, கீதாஜீவன் கல்லூரி, மற்றும் பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளிகளில் இருந்து 65 ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










