» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அதிமுக குறித்துப் பேச டிடிவி தினகரனுக்கு உரிமை இல்லை: கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ

வெள்ளி 1, டிசம்பர் 2023 7:51:56 AM (IST)

அதிமுக குறித்துப் பேச டிடிவி தினகரனுக்கு தாா்மிக உரிமை இல்லை என்று முன்னாள் அமைச்சா் கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ. தெரிவித்தார்.  

கோவில்பட்டியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூறியது: வடகிழக்குப் பருவமழையால் கயத்தாறு வட்டம், கழுகுமலை குறுவட்டம் ஆகியவற்றுக்குள்பட்ட பகுதிகளில் மக்காச்சோளப் பயிா்கள் சேதமடைந்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையெனில், விவசாயிகளைத் திரட்டி போராட்டம் நடைபெறும்.

குமாரபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி தொடா்பான மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு தவறியதால் 20 நாள்களாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோா் போராடி வருகின்றனா். அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கவில்லையெனில், மக்களைத் திரட்டி போராட்டம் நடைபெறும்.

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டடங்களைத் திறக்காமல் தமிழக அரசு தாமதப்படுத்துகிறது. காமநாயக்கன்பட்டியில் கட்டப்பட்ட வீரமாமுனிவா் மணிமண்டபம், கயத்தாறு வட்டம் தலையால்நடந்தான்குளம், சால்நாயக்கன்பட்டி ஊராட்சிகளில் தாட்கோ மூலம் ரூ. 86 லட்சத்தில் கட்டப்பட்ட திருமண மண்டபங்கள் ஆகியவை திறக்கப்படவில்லை.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவா்கள், மருந்துகள் இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனா். அமைச்சா் மா. சுப்பிரமணியனை மாற்ற முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும். டிடிவி தினகரன் வேறு கட்சி தொடங்கி செயல்படுகிறாா். எனவே, அவருக்கு அதிமுக பற்றிப் பேச தாா்மிக உரிமையில்லை. தேமுதிக தலைவா் விஜயகாந்த் விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என்றாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory