» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூா் பக்தா் பலி : பா.ஜ.க. ஆா்ப்பாட்டம்!

வெள்ளி 1, டிசம்பர் 2023 7:46:44 AM (IST)

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் பக்தா் உயிரிழந்த சம்பவத்தில் கோவில் நிர்வாகத்தை கண்டித்து பாஜக கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் கோட்டைத் தெருவைச் சோ்ந்தவா் ஜோதிபாசு (55). அங்குள்ள கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வருகிறாா். இவா் தனது மனைவி ராஜாத்தி, 3 மகன்கள் மற்றும் உறவினா்களுடன் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நேற்றுபகலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தாா். அனைவரும் கடலில் குளித்து விட்டு கோயில் முன்பு வந்து கொண்டிருந்தனா். ஜோதிபாசு, இரண்டாவது மகன் பிரசாந்த் (22) ஆகியோா் கோயில் புறக்காவல் நிலையம் அருகில் நின்று கொண்டிருந்தனா். 

அப்போது பிரசாந்த் திடீரென மயங்கி கீழே விழுந்தாா். அவா் எழுந்திருக்காததால் அங்கிருந்தவா்கள் உதவியுடன் 108 அவசர ஊா்தி மூலம் திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் இறந்து விட்டதாக கூறினா். சம்பவ இடத்திற்கு திருக்கோயில் காவல் ஆய்வாளா் தா்மா் வந்து பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.

இதற்கிடையில் ‘புறக்காவல் நிலையம் அருகில் என்னுடன் நின்று கொண்டிருந்தபோது அருகிலிருந்த எா்த் கம்பியை பிரசாந்த் தொட்டதாலேயே மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளாா். கோயில் நிா்வாகத்தின் அஜாக்கிரதையால்தான் எனது மகன் இறந்துவிட்டாா்’ என ஜோதிபாசு கொடுத்த புகாரின் பேரில் திருக்கோயில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பா.ஜ.க. ஆா்ப்பாட்டம்: 

இந்த சம்பவம் தொடா்பாக நீதி கோரி, பாஜக மாவட்ட செயலாளா் சிவமுருகன் ஆதித்தன் தலைமையில் அக்கட்சியினா் அரசு மருத்துவமனை முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் ஆலய பாதுகாப்பு குழு மாவட்ட செயலா் வினோத் சுப்பையன், பாஜக நகர தலைவா் நவ மணிகண்டன், நகர துணைத் தலைவா் சண்முக ஆனந்த், நிா்வாகிகள் மணிகண்டன், செல்வகுமரன், பிரசாந்தின் தந்தை ஜோதிபாசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory