» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மின் சிக்கனம் விழிப்புணர்வு கருத்தரங்கம்!

வியாழன் 30, நவம்பர் 2023 5:16:08 PM (IST)



செய்துங்கநல்லூரில் தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் மற்றும் மத்திய திறனுக்க செயலகம் சார்பில்  விவசாயிகளுக்கான மின் சிக்கனம் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

நிகழ்ச்சியை மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். தொடர்ந்து விவசாயிகள் குத்து விளக்கேற்றினர். தூத்துக்குடி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தலைமை வகித்தார். விவசாயிகளுக்கான மின் சிக்கனம் மின் பாதுகாப்பு மற்றும் மின் திறன் விழிப்புணர்வு பயிற்சி குறித்து செய்துங்கநல்லூர் உதவி மின் பொறியாளர் சுரேஷ்குமார் பேசினார். 

விவசாயிகளின் நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆற்றும் பணிகள் மற்றும் மானியங்கள் குறித்து செய்துங்கநல்லூர் வேளாண்மை உதவி இயக்குனர் இசக்கியப்பன் பேசினார். தோட்டக்கலை சாகுபடியில் துல்லியமான சாகுபடி ஈட்டுவது குறித்து கருங்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெயந்தனும் பேசினார்.

தூத்துக்குடி ஊரக கோட்ட செயற்பொறியாளர் சின்னத்துரை வரவேற்றார். தூத்துக்குடி உதவி பொறியாளர் பெருமாள் தொகுத்து வழங்கினார். தூத்துக்குடி நகர செயற்பொறியாளர் ராம்குமார், தூத்துக்குடி மத்திய அலுவலக உதவி செயற்பொறியாளர்கள் வேலாயுதம், ஆறுமுகம், அப்துல்லா, ஸ்ரீவைகுண்டம் உபகோட்ட உதவிபொறியாளர்கள் ஏரல் ராஜேந்திரன், ஸ்ரீவைகுண்டம் முரசொலிமாறன், ஸ்ரீவைகுண்டம் ஊரகம் சங்கீதா மற்றும் உபகோட்ட பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

இதில் செய்துங்கநல்லூர், கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், ஏரல் உட்பட பல பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி செயற்பொறியாளர் பொது ரெமோனா நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory