» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் சிறுதானிய விழிப்புணர்வு கருத்தரங்கு!
வியாழன் 30, நவம்பர் 2023 3:17:02 PM (IST)

தூத்துக்குடி மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் சிறுதானிய பயன்பாடு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன், இயக்குநர் ஜார்ஜ் கிளிங்டன் ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினராக ஸ்காட் குழும ஹோம் சயின்ஸ் சிறப்பியல் சுமதி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், சிறுதானிய உணவு முறையை நாம் கையாண்டால் தான் உடல் பலப்படும். நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். சிறுதானிய உணவுகளை புறக்கணிக்காமல் அவற்றை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். அன்றாட உணவுடனே சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அப்போது தான் நோய்களை தடுக்க முடியும். தற்போது ஏராளமான சிறுதானிய உற்பத்தி பொருள்கள் சந்தைக்கு வந்துள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சி இருந்தாலும், சிறுதானியங்களை விவசாயம் செய்து பலன் பெறலாம் என்று கூறினார். சிறுதானிய மாதிரி பொருள்களையும் அவர் மாணவர்களுக்கு காட்டினார். மேலும், சிறுதானிய உணவு உற்பத்தி செய்யும் நவீன இயந்திரங்கள் கிடைக்கும் இடங்களையும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிர்வாக மேலாளர் விக்னேஷ் மற்றும் இயந்திரவியல் துறை உதவி பேராசிரியர் மெக்லுரட் ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










