» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இளம்பெண் தற்கொலை: போலீஸ் விசாரணை

வியாழன் 30, நவம்பர் 2023 11:53:05 AM (IST)

உடன்குடியில் கல்லூரி பெண் ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகள் செல்வபாரதி (25). இவர் ஒரு தனியார் கல்லூரியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று வழக்கம் போல கல்லூரிக்கு சென்ற அவர் மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்துள்ளார். சிறிது நேரம் கழித்து அவரது தாய் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். 

அப்போது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் செல்வபாரதி பிணமாக தொங்கினார். இது தொடர்பாக தகவலின் பேரில் குலசேகரன் பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வபாரதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், செல்வபாரதி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory