» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க வைரவிழா வட்டக் கிளை மாநாடு

வியாழன் 30, நவம்பர் 2023 9:58:12 AM (IST)தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க வைரவிழா வட்டக் கிளை மாநாடு கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. 

மாநாட்டிற்கு வட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். ‌வட்டச் செயலாளர் அருண்குமார் வரவேற்புரை ஆற்றினார். வைரவிழா  மாநாட்டை துவக்கி வைத்து மாவட்ட தலைவர் சுவாமிநாதன் உரை நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் ஞானராஜ், மாவட்டத் துணைத் தலைவர் ராஜ்குமார், அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் உமாதேவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.‌

மாநாடு நிறைவுரையை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் செந்தூர் ராஜன் உரையாற்றினார்.மேற்கண்ட மாநாட்டில் வைத்து சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர்  ராஜ்குமார்  மாநாட்டு ரீதியாக ரூபாய் 5000 வழங்கினார்.‌ அதன் பின்னர் கோவில்பட்டி வட்டத்தின் மண்டல துணை வட்டாட்சியர் செந்தில் முருகன்  ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கினார். நிறைவாக மாவட்ட செயற்குழு உறுப்பினர்  முத்து கண்ணன் நன்றியுரை ஆற்றினார்.

முன்னதாக வட்டக் கிளை நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில், வட்டக்கிளை தலைவராக செந்தில்குமார், வட்ட செயலாளராக அருண்குமார், பொருளாளராக ராஜசேகர்,வட்டத்துணை தலைவராக சங்கரன், வட்ட இணை செயலாளராக ஜெயலட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினராக முத்து கண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital

Thoothukudi Business Directory