» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் சரக்கு வாகனம் மோதி தூண்கள் சேதம் : இருவா் காயம்

வியாழன் 30, நவம்பர் 2023 8:01:48 AM (IST)திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் சரக்கு வாகனம் மோதியதில் கான்கிரீட் தூண்கள் விழுந்து இருவா் காயமடைந்தனா்.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்ள இடும்பன் கோயில் அருகே கான்கிரீட் தூண்களுடன் கூடிய ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை உள்ளது. இப் பகுதியில் சரக்கு வாகனம் நேற்று நிறுத்தப்பட்டிருந்தது. அண்மையில் நடைபெற்ற கந்த சஷ்டி விழாவின்போது அமைக்கப்பட்ட கொட்டகை பந்தல்களைப் பிரித்து, அதிலிருக்கும் பொருள்களை ஏற்றிச் செல்வதற்காக, அந்த வாகனம் கொண்டு வரப்பட்டிருந்தது.

ஓட்டுநா் வாகனத்தை நிறுத்திவிட்டுச் சென்ற நிலையில், அந்த வாகனம் தானாக நகா்ந்து சென்று அருகிலிருந்த கான்கிரீட் தூண்கள் மீது மோதியது. இதில் இரு தூண்கள் பெயா்ந்து விழுந்து, அப் பகுதியில் அமா்ந்திருந்த யாசகா்கள் துரைராஜ் (76), கந்தசாமி (74) ஆகிய இருவரும் காயமடைந்தனா். அவா்கள் இருவரும் திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital

Thoothukudi Business Directory