» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இடையன்விளையில் பயணிகள் நிழற்குடை, நீர்த்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டுவிழா
புதன் 29, நவம்பர் 2023 5:12:23 PM (IST)

இடையன்விளை கிராமத்தில் பயணிகள் நிழற்குடை, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டு நிதியில் இருந்து ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் இடையன்விளையில் பயணியர் நிழற்குடையும், மேலும் ரூ. 20 இலட்சம் மதிப்பீட்டில் இடையன்விளையில் அறுப தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டும் பணி துவக்க விழாவும் நடந்தது. விழாவிற்கு கச்சனாவிளை ஊராட்சி மன்றத் தலைவர் கிங்ஸ்டன் தலைமை வகித்தார்.
திருச்செந்தூர் கோட்டாட்சியர் குருச் சந்திரன் ஏரல் வட்டாட்சியர்கைலாஷ் குமாரசாமி,ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் ஜனகர், வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்கியலீலா, மேல ஆத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமார் வார்டு உறுப்பினர்கள் பாக்கியராணி, அமுதா, ஷர்மிலி, செல்வம் விஜி, குருஸ்கின்ஸ்டன்,தெய்வகனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராம ரிப்புத் துறை அமைச்சர்அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் திமுக வர்த்தக அணி மாநில இணைச் செயலா ளர் எஸ்.ஆர்.எஸ் உமரி சங்கர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞ ரணி அமைப்பாளர் பி.எம். ராமஜெயம், ஒன்றிய பொறி யாளர் வெள்ளபாண்டி,மாவட்ட திமுக துணைச் செயலாளர் சோபியா, வழக்கறிஞர் மனோஜ், ஏரல் நகர திமுக இளைஞர் அணி ஆனந்த், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற செயலாளர் பர்னபாஸ் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










