» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அன்னம்மாள் கல்லூரியில் சர்வதேச மகளிருக்கு எதிரான வன்கொடுமை தினம்!

செவ்வாய் 28, நவம்பர் 2023 4:34:03 PM (IST)



தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் சர்வதேச மகளிருக்கு எதிரான வன்கொடுமை தினத்தை முன்னிட்டு நிலைக்காட்சி போட்டி நடைபெற்றது. 

தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியின் மகளிர் மேம்பாட்டுக் கழகம், ஸீசைடு (Seaside) ரோட்டரி சங்கம் சார்பில் சர்வதேச மகளிருக்கு எதிரான வன்கொடுமை தினத்தை முன்னிட்டு இன்று கல்லூரியின் இளங்கலை கல்வியியல் முதலாமாண்டு மாணவியருக்கு நிலைக்காட்சி போட்டி நடடைபெற்றது. 

மாணவியர் பாலின ரீதியான வன்கொடுமை என்ற தலைப்பினை ஆறு குழுக்களாகப் பிரிந்து சமூகத்தில் நிலவும் மகளிருக்கு எதிராக நிலவும் வன்கொடுமைகளை நிலைக்காட்சிப்படுத்தினர். நடுவர்களாக சுரேஷ் மற்றும் சுப்பையா வித்யாலயம் பள்ளியின் முன்னாள் உதவித் தலைமையாசிரியை திகலைச்செல்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.

முதல் மூன்று இடங்களை வென்ற மாணவியருக்கு ஸீசைடு ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஜூடு விஜயன் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி செயலர் முரளிதரன், கல்லூரி முதல்வர் அ. ஜாய்சிலின் சர்மிளா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும், கல்லூரியின் உதவிப் பேராசியருமான வினோதினி சில்வியா மற்றும் எமிமா ஆகியோர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory