» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாநில செஸ் போட்டியில் நெல்லை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி சாதனை!

திங்கள் 20, நவம்பர் 2023 6:51:50 PM (IST)



நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி மாணவியர் மாநில அளவில் நடந்த மகளிர் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகம் மண்டலங்களுக்கிடையேயான  மகளிர் செஸ் போட்டி சென்னை ஆனந்த் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வளாகத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகம் முழுவதும் உள்ள  பல்வேறு மண்டலங்களைச்  சேர்ந்த கல்லூரி மகளிர் குழுவினர் பங்கேற்றனர். 

இதில் எப்.எக்ஸ்.பொறியியல் கல்லூரி சார்பில் எலக்ட்ரானிக்ஸ் துறை மாணவியர் தனிஷா ராம்ஜோதி, பிளெஸ்ஸி எபனேசர், பெஜிஷா தேவி, கலாவதி, அபிராமி, (முதலாம் ஆண்டு  கணினித்துறை)  கலந்துகொண்டு அபாரமாக ஆடினர். இப்போட்டியில் பல்வேறு அணிகளை வீழ்த்தி அவர்கள் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற எப்.எக்ஸ். கல்லூரி மகளிர் குழுவுக்கு  பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

இதற்கு ஊக்கம் அளித்த பொதுமேலாளர் முனைவர்  ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், கல்லுரி முதல்வர் முனைவர் வேல்முருகன், வளாக மேலாளர் பேராசிரியர் சகாரியா கேப்ரியல், உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேஷ்குமார், எஸ்தர் ராணி, நாராயணன் மற்றும் மாணவியரை ஸ்காட் கல்விக்குழும நிறுவனர் முனைவர் கிளிட்டஸ் பாபு, தாளாளர் பிரியதர்ஷினி அருண்பாபு ஆகியோர் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital












Thoothukudi Business Directory