» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஓட்டை, உடைசல் அரசு பேருந்துகளை மாற்ற நடவடிக்கை : பயணிகள் கோரிக்கை!

சனி 18, நவம்பர் 2023 3:16:11 PM (IST)



நாசரேத்திற்கு இயக்கப்படும் ஓட்டை, உடைசல் அரசு பேருந்துக ளை மாற்றி நல்ல கன்டிசனில் இயங்கும் பேருந்துகளை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் வழித்தடத்தில் ஓடக்கூடிய அனைத்து அரசு பேருந்துகளும் பழைய  இரும்புக்கு பேரிச்சம்பழம் என்ற கணக்கில் தான் ஓடுகிறது. மேலும் வேறு வழித்தடங்களில் இயக்க முடியாமல் விட்டு விட்டு சென்ற பேருந்துகளையே இந்த வழித்தடத்தில் இயக்குகிறார்கள். இது குறித்து பலமுறை கேள்வி கேட்டும் எந்த பயனும் இல்லை. நாசரேத்திற்கு என்று  கேட்டு வாங்கிய வந்த பேருந்துகளையும் கொடுப்பதில்லை. 

இதற்கு எல்லாம் காரணம் இந்த பகுதியில் ஓடக்கூடிய தனியார் பேருந்துகளின் ஆதிக்கமே என்று பேசப்படுகிறது. தனியார் பேருந்துகள் ரதம் மாதிரி இயக்கப்படுகிறது. ஆனால் இந்த பகுதியில் ஓடக்கூடிய அரசு பேருந்துகள்  ஓடுவதற்கு தகுதியற்ற பேருந்துகளை இயக்குகிறார்கள். 

ஆகவே தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் அரசு போக்குவரத்து கழகத்தை மாவட்ட நிர்வாகம்  உடனடியாக தலையிட்டு நாசரேத் வழித்தடத்தில் நல்ல நிலையில் இயங்கக் கூடிய பேருந்து களை இயக்கி வசூலை கூட்ட நடவடிக்கை எடுக்கவும், இலவசமாக இயக்கக்கூடிய நகரப் பேருந்துகள் அனைத்தும் நாசரேத்துக்கு இயக்கப்படுகின்றன. அதிக அளவில் இது தமிழக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துவதுடன் வரக்கூடிய எம்.பி., தேர்தலில் இதனுடைய ரிசல்ட் எதிரொலிக்கும் என்றும் பொதுமக்கள் பேசிக் கொள்கின்றனர்


மக்கள் கருத்து

ஓட்டு போட்ட முட்டாள்Nov 18, 2023 - 05:00:22 PM | Posted IP 162.1*****

எல்லாத்தையும் நாம (பயணிகள்) தான் சொல்லணும், அவங்களுக்கு மாற்ற அறிவு இருக்காது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory