» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பிரதான சாலையில் மழைநீர் தேங்கி அவலம்: மாணவ, மாணவிகள் கடும் அவதி!

திங்கள் 6, நவம்பர் 2023 11:21:10 AM (IST)



தூத்துக்குடியில் பிரதான சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் பள்ளி மாணவ, மாணவியர் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

தூத்துக்குடியில் பெருமாள் புரம் மெயின் ரோட்டில் நீதிபதி குடியிருப்பு எதிரே உள்ள பிரதான சாலையில் சிறிய மழை பெய்தாலே மழை நீர் தேங்கி நிற்கிறது. மேலும் அந்த சாலை உடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் அவ்வழிய செல்லும் வாகன ஓட்டிகள் மழை நீரில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இந்த பகுதியில் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல் நிலை பள்ளி, பாரதியார் வித்யாலயம், ஹோலி கிராஸ் மற்றும் மருத்துவமனைகள் உள்ளது. 

தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பாதையை கடந்து செல்கின்றனர்.  சிறிய மழை பெய்தாலும் மழை நீர் தேங்குகிறது. அருகில் மழைநீர் வடிகால் இருந்தும் அதில் மழைநீர் செல்லாமல் சாலையில மழைநீர் தேங்கி நிற்கிறது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் பல முறை முறையிட்டும் மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. எனவே,  மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இந்த சாலையை உடனடியாக சீரமைக்க போர்க்கால அடிப்படையில் மேயர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital









Thoothukudi Business Directory