» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் : இந்து இளைஞர் முன்னணி கோரிக்கை

வெள்ளி 29, செப்டம்பர் 2023 5:01:48 PM (IST)



தூத்துக்குடியில் நடைபெற இருக்கும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்து இளைஞர் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக  இந்து இளைஞர் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவிசண்முகம் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோாரிக்கை மனுவில், "மதுரை அண்ணாநகர் பகுதியில் கடந்த 24ம் தேதி நடைபெற்ற Happy street மதுரை நிகழ்ச்சியில் போதுமான முன்னேற்பாடுகள் இல்லாமல் அதிகளவு மக்கள் கூட்டத்தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்தனர். இளைஞர்களுக்குள் அடிதடி போன்ற விபரீத முடிவுகள் ஏற்பட்டது. மற்றும் அந்த நிகழ்ச்சியில் அரசியல் பேசப்படுகிறது. ஏற்கனவே திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்கள் சமுதாய ரீதியான பிரச்சினை உள்ள மாவட்டங்கள். எனவே தூத்துக்குடியில் Happy street நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது என்று பல விளம்பர நிறுவனங்கள் மற்றும் youtube தளத்தில் விளம்பரம் செய்யப்படுகிறது. 

ஏற்கனவே தூத்துக்குடி மாநகர பகுதியில் போக்குவரத்துக்கு போதுமான சாலை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் சூழ்நிலையில் பொது போக்குவரத்தை நிறுத்திவிட்டு இந்நிகழ்ச்சிக்கு தாங்கள் அனுமதி கொடுத்தால் கலாச்சார சீர்கேடுகளுக்கு வழிவகுக்கும். இந்த வகையான நிகழ்வுகளால் பொதுமக்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் பல்வேறு வகையான இன்னல்களுக்கு ஆளாக கூடும். மேலும் வேறு எந்த அசம்பாவிதங்களும் நடக்கும் முன்னர் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

JAIHINDSep 29, 2023 - 06:51:50 PM | Posted IP 172.7*****

GOOD DECISION

KARNARAJ RSep 29, 2023 - 06:03:10 PM | Posted IP 162.1*****

HAPPY STREET REQUIRED, BUT SHOULD BE KEPT IN ECR ROAD FOR ALL SUNDAYS LIKE BEFORE. KEEPING HAPPY STREET INSIDE CITY ROAD IS NOT GOOD IDEA AS OF NOW. THAT CAN BE DONE AFTER SHIFTING RAILWAY STATION TO MEELAVITTAN AND INTEGRATED BUSSTAND AT CITY OUTSIDE.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory